News Channel

இளைஞர்களுக்கான சிறப்பு அமர்வு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மெட்ரோ சார்பில் இளைஞர்களுக்கான சிறப்பு அமர்வு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மெட்ரோ சார்பில் இளைஞர்களுக்கான சிறப்பு அமர்வு 14.06.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உமர் முக்தார் பட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தனது உரையில், இளைஞர்கள் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும், தங்களது ஆளுமைத் திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும், கிடைக்கும் கால அவகாசத்தை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பன குறித்து பல நடைமுறை உதாரணங்களுடன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

மேலும், சகோதரர் சாதிக் பாஷா அவர்கள் பேசுகையில், கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய நமது சொந்த முயற்சியே அடிப்படை என்பதை உணர்ந்து, அதில் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை மாநகரத் தலைவர் நசீர் அத்தாவுல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்றி, இளைஞர்கள் கல்வி, ஆளுமை மேம்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் 120-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.