17 நவம்பர் 2024
"பத்திரிகை அறிக்கை"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
அகில இந்திய உறுப்பினர் மாநாடு மிகச் சிறந்த உலகை கட்டியெழுப்பும் முழக்கத்துடன் நிறைவு பெற்றது.
ஹைதராபாத்:
"நீதி மற்றும் நியாயம் " என்ற மையக் கருத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அகில இந்திய உறுப்பினர் மாநாடு 17.11.24 ஞாயிறு அன்று
நிறைவடைந்தது .
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி,
ஜமாஅத் உறுப்பினர்களிடம் நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில் சமூகத்தை மறு கட்டமைக்கும் லட்சியத்திற்காக தங்களை அர்ப்பணிப்பு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த மாநாட்டில்
நிறையுரை ஆற்றிய
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள்
ஒவ்வொருவரும் தாங்கள் உறுப்பினராக சேரும்போது எடுத்த உறுதிமொழியை நினைவூட்டினார்.
உண்மையில் நாம் அனைவரும் மாற்றங்கள் ஏற்பட காத்திருக்காமல் தாமே முன்வந்து மாற்றத்தை ஏற்படுத்தும் நபராக,
இந்த மாற்றங்களை தங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
உறுப்பினர்கள் தங்களுக்கிடையே பரஸ்பர ஆதரவு,
ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்,
ஏனெனில் அவை ஒரு வலுவான குழுவை பராமரிக்க தேவைப்படுகிறது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் உறுப்பினர்கள் சிறிய பிரச்சனைகளை அதிகமாக முன்னிலைப் படுத்தாமல்,
நமது வாழ்வின் முக்கிய பணிகளை கவனிக்கவில்லை என்ற பலகீனம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார் .
இதை உறுதிப்படுத்தும் விதமாக,
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி, உறுப்பினர்கள் தங்களின் தார்மீக கடமைகளைக் கவனித்தல்,
குடும்ப உறவுகளை பராமரித்தல்,
மற்றும் அனைத்து துறைகளிலும் உண்மையுள்ள மற்றும் நம்பிக்கை கொண்ட வாழ்க்கையை வாழும் அவசியத்தை வலியுறுத்தினார்.
தனிநபர் பொறுப்புக்களை ஒப்புக்கொள்ளுதல்,
ஈமானை மேம்படுத்துதல் மற்றும் நெறியியல் மதிப்புகளில் நிலைத்திருத்தல் என அனைத்தும் ஒரு மதிப்புள்ள சமுதாயம் உருவாக்கும் பணியின் நீண்டகால வெற்றிக்கு தேவையானவை என்றும் குறிப்பிட்டார்.
இந்த மூன்று நாட்களைக் கொண்ட மாநாட்டின் இறுதியில்,
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள மாநில மற்றும்
உள்ளூர் தலைவர்கள் தங்கள் சிறந்த அமைப்புப் பணிகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு புதிய யோசனைகள் மற்றும் திட்டங்களை கொண்டுவந்தனர்,
அவை அமைப்பின் வளர்ச்சிக்கு,
சமூக பரவலுக்கு உதவும்.
இந்த மாநாட்டில் சமூக, கல்வி மற்றும் பொருளாதார விவகாரங்களில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
இதில் ஆன்மிகம், மனித உரிமைகள், கல்வி, மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள் கவனிக்கப்பட்டன. ‘IDRAK தஹ்ரிக் showcase’ என்ற தனிப்பட்ட கண்காட்சி, இந்தியாவில் பல இடங்களில் நடக்கும் 100க்கும் மேற்பட்ட சமூக மற்றும் சமூக வளர்ச்சி திட்டங்களை காட்சிப்படுத்தியது.
இந்த மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார் சித்திகி,
இந்த மாபெரும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதில் உறுதுணையாக இருந்த அனைத்து அரசுத்துறை,
உள்ளூர் நிர்வாகம்,
போலீசார் மற்றும் 1500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி கூறினார்.
வழங்கியவர்:
சல்மான் அஹ்மத்
ஊடகத்துறை,
தேசிய துணை செயலாளர்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தலைமையகம்,
புதுடெல்லி.
https://www.facebook.com/share/p/1B9rmTfEEk/