"பத்திரிக்கை செய்தி"
16-11-2024
முஸ்லிம்கள் ஆகிய நாம்,
நாட்டின் அனைத்து வகுப்பினருடனும் சகோதர உறவுகளை உருவாக்குவதன் மூலம், அனைவருக்குமான
நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்: தலைவர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.
புதுதில்லி: ஜமாஅத் இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றிய
ஜமாஅத் இஸ்லாமி ஹிந்தின் தலைவர் சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி, ஜமாஅத்தின் உறுப்பினர்களை தங்கள் செயல்பாடுகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்து பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அவர் 2025 ஆம் ஆண்டிற்காக RISE என்ற முழக்கத்தை வழங்கிய அவர், அதன் முதல் எழுத்து 'R' என்பது 'ரீச் அவுட் (Reach out)
என்பதைக் குறிக்கிறது,
அதாவது பெரிய அளவில் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது எழுத்து
"I". இதன் பொருள் 'தனிப்பட்ட பங்களிப்பு (Individual Contribution) அதாவது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும்.
சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக சேவையில் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவது எழுத்து "S"
இதன் பொருள் "(Shift in public opinion)
"மக்கள் கருத்தில் நேர்மையான மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மற்றும் கடைசி எழுத்து 'E' இதன் பொருள் 'Engagement' அதாவது பெரிய அளவில் சமூக உறவுகளும் தொடர்பும் உருவாக்குதல் என்பதாகும்.
இந்த நான்கு விஷயங்களையும் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டை எழுச்சியின் (RISE ன்) ஆண்டாக ஆக்குவதற்கு உறுதியெடுப்போம்"
மேலும் அவர் கூறுகையில்,
"இந்த நாட்டில் ஒழுக்கமுள்ள,
திறமையுள்ள தலைமுறைகளை உருவாக்குவதில்
SIO மற்றும் GIO இஸ்லாமிய மாணவ மாணவிகளின் அமைப்புகள் அசாதாரணமான பங்கை ஆற்றியுள்ளன. ஒளிமையமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப இளைஞர்களையும்,
மாணவ அமைப்புகளையும் உறுதிப்படுத்தவும் வலுப்படுத்தவும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இயக்க சேவைகளில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பைப் பாராட்டிய அவர்,
இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பும், பல்வேறு முனைகளில் அவர்களின் சேவைகளும் மிக வேகமாக முன்னேறி வருவதாகவும்,
இந்த விரைவான வளர்ச்சி சிறந்த எதிர்காலத்தை உறுதியளிக்கிறது என்றும் கூறினார்.
தற்போதைய தேசிய, உலகளாவிய சவால்களைப் பற்றி தலைவர் பேசுகையில், "இந்த சூழ்நிலைகளில், குற்றச்சாட்டுகள் அல்லது உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளை மேற்கொள்வதற்கு பதிலாக,
செயலிலும் விவேகத்திலும் தீவிர அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்று கூறினார்.
நாம் நமது சவால்களில் வாய்ப்புகளைத் தேட வேண்டும்.
ஏனெனில் சவால்கள் தற்காலிகமானவை, தொடர் போராட்டத்தால் இதை வெல்ல முடியும்.
"பொது கருத்தை வடிவமைக்கவும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் அமைதியான சட்டப்பூர்வமான வழிகளை பயன்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
கூட்டத்தின் இரண்டாம் நாள் உறுப்பினர் மாநாட்டில் ஜமாஅத்தின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினார்கள்.
மாநாடு மௌலானா ஏஜாஸ் அஸ்லாம் அவர்களின் குர்ஆன் விரிவுரையுடன் தொடங்கியது. மாநாட்டில்,
தெலுங்கானா மாநிலத் தலைவர் டாக்டர் காலித் முபஷ்ஷிருல் ஜஃபர் தொடக்கவுரையாற்றினார்.
எஸ்.ஐ.ஓ.வின் தேசியத் தலைவர் ரமீஸ் EK சமூகத்தின் மறுகட்டமைப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கை எடுத்துரைத்தார்.
மேலும்
'ஜிஐஓ'வின் National federation னின் தலைவர் சுமையா ரோஷன், மாணவியர்களில் இஸ்லாமிய இயக்கத்தில் வேகமான வளர்ச்சி,
இளம் பெண்களின் மார்கத்துடன் உள்ள தொடர்பை குறித்து பேசினார்.
இந்நிகழ்வில் ஜமாஅத்தின் அகில இந்திய செயலாளர் திருமதி.ரஹ்மதுன்னிசா சாஹிபா அவர்கள் மகளீர் மத்தியில் இஸ்லாமிய இயக்கம், புதிய தேவைகளும் புதிய திசைகளும் குறித்து தங்கள் கருத்தை எடுத்துரைத்தார்.
ஜமாஅத்தின் துணைத் தலைவர் எஸ்.அமீனுல் ஹஸன் சாஹிப் அவர்கள் உலக நிலைமையும், நீதிக்கும் சமத்துவத்திற்க்கும் இடையிலான உறவை வெளிச்சம் போட்டு காட்டினார்.
துணைத் தலைவர் ஜனாப் இஞ்சினீயர் முஹம்மது சலீம் அவர்கள் நம் தேசிய நிலைமையும் இன்றைய சவால்களும் பற்றி பேசினார்.
உறுப்பினர்கள் கூடும் நிகழ்வில், "இயக்கம் அறிவோம் கண்காட்சி" என்ற சிறப்பு கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
கூட்டத்தின் இரண்டாவது நாளில்,
15 இணை அமர்வுகள் நடைபெற்றன, ஒவ்வொரு அமர்வும் ஜமாஅத் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் தற்போதைய பணிகளும் பல்வேறு கல்வி, அறிவுசார், கருத்தியல், தார்மீக, ஆன்மீகம், கல்வி, சமூக மற்றும் அரசியல் தலைப்புகளை உள்ளடக்கி விவாதிக்கப்பட்டன.
வழங்கியவர்:
முஹம்மது சல்மான்
தேசிய துணைச் செயலாளர்,
ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புதுடெல்லி.