05 நவம்பர் 2024
பத்திரிகை செய்தி
உத்தரபிரதேச மதரசா கல்வி சட்டத்தை ஆதரித்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்:
மத்திய தாலீமி போர்டு செயலாளர் சையத் தன்வீர் அஹ்மத்
புது தில்லி:
மத்திய தாலீமி போர்டு (கல்வி வாரிய) செயலாளர் சையத் தன்வீர் அஹ்மத், உத்திரப்பிரதேச மதரஸா கல்வி சட்டம் 2004 ஐ ஆதரித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
தனது செய்தி வெளியீட்டில், மத்திய தாலீமி போர்டு செயலாளர் சையத் தன்வீர் கூறியதாவது, "உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்று மதிக்கத் தக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்த சட்டம் அரசியல் முறையாக செல்லாதது என அறிவித்த அலகாபாத் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மாற்றியுள்ளது.
இந்த தீர்ப்பு உத்தரபிரதேசத்தில் சிறுபான்மை சமூகங்களின் கல்வி உரிமைகளை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இத்தீர்ப்பு மதரசா மாணவர்களின் கல்வி உரிமையை காக்கின்றதோடு, மத சிறுபான்மைகளின் கல்வி நிலையங்களை பாதுகாக்கும் அரசியல் கொள்கைகளையும் உறுதிப்படுத்துகிறது.
மதரசாக்கள் தங்கள் அடையாளத்தை இழக்காமல் மத மற்றும் சாதாரண கல்வியையும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற மாநிலத்தின் பொறுப்பை இந்த தீர்ப்பு வலுப்படுத்துகிறது."
சையத் தன்வீர் தொடர்ந்து கூறியதாவது,
"உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.வை. சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொடுத்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். மாணவர்களுக்கு மார்கக் கல்வி கொடுப்பது ஒரு சட்ட விரோத செயல் அல்ல. இந்த சந்தர்ப்பத்தில் சுப்ரீம் கோர்ட் மிகத் தெளிவாக கூறியதாவது, ‘செக்யூலரிசம்’ என்பது "வாழ்வது பிறரையும் வாழ விடுவது" என்பதே ஆகும். இதனால் இந்தியாவின் பன்முகக் கல்வி முறைகள் பேணும் சமநிலையான சமூக அமைப்பை வளர்த்தெடுக்கும்.மத்திய தாலீமி போர்டு இந்த தீர்ப்பு சில முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாக கருதுகிறது, குறிப்பாக (A) உச்சநீதிமன்றம் மதரசா சட்டத்தை மதரசாக்களில் கல்வியைத் தரமானதாக மாற்றுவதற்கான பொறுப்பு மாநிலக் கடமையுடன் பொருந்துகிறது என்பதையும், மாணவர்கள் சமூகத்தில் பங்கு கொள்ளும் திறனைப் பெற வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது. (B) சட்டப்பிரிவு 21A வலியுறுத்தி கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மத, மொழி சிறுபான்மைகளின் உரிமைகளை ஒரே அடிப்படையில் பொருள்மிகு எனக் கருதி, மதரசாக்கள் தங்கள் மத அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டு பொது கல்வியையும் அளிக்க முடியும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது."
இந்த தீர்ப்பின் அந்த நோக்கத்தை பற்றி சிறப்பிக்கையில்,மத்திய தாலீமி போர்டு செயலாளர் கூறியதாவது, "உத்தரபிரதேச மதரசா சட்டத்தை ஆதரித்து, இத்தகைய கல்வி நிலையங்கள் சமூகத்தில் பயனுள்ளதாக பங்காற்றுகின்றன என்று உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு மத மற்றும் கலாச்சார அடையாளத்தை பேணும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு நம்பகமான செய்தியை வழங்குகிறது. இந்த சமநிலையும் நீதியும் கொண்ட தீர்ப்பு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுமார் 17 லட்சம் மதரஸா மாணவர்களின் கல்வி விருப்பங்களுக்கான உரிமையை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் மதரசாக்களை தவறாக சித்தரித்து, மதரஸாக்களுக்கும் கல்வி உரிமை சட்டத்துக்கும் இடையே பிளவை உருவாக்க முயற்சிக்கும் சில அமைப்புகளின் தீய பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் ."
வழங்கியவர்:
சல்மான் அஹமத்,
தேசிய உதவி செயலாளர்,
ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
தலைமையகம்
புதுதில்லி
https://www.facebook.com/share/p/19RDoMKZ2P/