News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி சார்பாக

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி சார்பாக "ஒழுக்கமே சுதந்திரம்" பரப்புரையின் ஒரு அங்கமாக பெண்களுக்கான அரங்கக் கூட்டம் மற்றும் வாழ்வியல் கண்காட்சி நடைபெற்றது.

ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மகளிர் அணி சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை செப்டம்பர் 1 முதல் 30 வரை மாதம் முழுவதும் நடைபெற்றது,

இறுதி நிகழ்வாக அரங்க கூட்டம்  மற்றும் வாழ்வியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சி 19/10/24 சனிக்கிழமை அன்று புதுச்சேரி Waqf Board சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மகளிர் அணி நாஜிமா சகோதரி நஸ்ரின் பானு தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் முதலாவதாக சகோதரி ஹீனா கிராஅத் ஓதினார், தமிழ் மொழிபெயர்ப்பு சகோதரி வாஜிதா வாசித்தார்.

சகோதரி ஷாஹீன் அனைவரையும் வரவேற்றார். துவக்கவுரை ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மண்டல அமைப்பாளர் ஜனாப் M. அப்துல் ஹமீது ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில பொது செயலாளர் ஜனாப் K. ஜலாலுதீன் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மகளிர் அணி செயலாளர் சகோதரி A. ஃபாத்திமா ஜலால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

சிறப்புரை

மாநில பொது செயலாளர் ஜனாப் K. ஜலாலுதீன் தனது சிறப்புரையில் "மனிதர்களாகிய நாம் விலங்குகள் அல்ல மனம் போன போக்கில் வாழ்வதற்கு, இந்த மனித சமுதாயத்தை சீர்படுத்தும் பணி முஸ்லிம் சமுதாயத்திடம் அல்லாஹ் கொடுத்து இருக்கின்றான். சமுதாயத்தையும் நாட்டையும் பற்றிய கவலை முஸ்லிம் சமூகத்திடம் இருக்க வேண்டும், சமூக ஒழுக்கக்கேடு ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்க கூடியது இறைவனுடைய பார்வையில் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது. தொழுகை மனிதனை ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாக்க வேண்டும் இறைவனுக்கு அஞ்சுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும் இறைவனிடம் வெட்கப்பட வேண்டும், செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது நாளை இறைவன் முன் பதில் சொல்லியாக வேண்டும் என்ற சிந்தனையுடன் வாழ வேண்டும்" என்று மக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்தினார்.

மாநில மகளிர் அணி செயலாளர் சகோதரி A. ஃபாத்திமா ஜலால் தனது சிறப்புரையில் "எல்லையற்ற சுதந்திரம் என்பது கிடையாது!, அந்நியக் கலாச்சாரத்தில் இருந்து நாம் மீள வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு நாம் சிறுவயதில் இருந்து ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும், இன்று கல்வி நிலையங்களில் ஒழுக்க போதனை என்று ஒன்று இருப்பதில்லை, வீட்டிலேயும் இந்த ஒழுக்க போதனை கிடைக்கவில்லை என்றால் அறம் சார்ந்த வாழ்வு எங்குமே கிடைக்காது, இன்றைய தினம் அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுகின்றார்கள், இன்றைய தினம் கல்வி கற்றவர்கள் தான் அதிகம் தவறு செய்கின்றார்கள், அவர் ஏன் தவறு செய்கிறார்கள் என்றால் ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த கல்வி அவர்களுக்கு பள்ளிகளில் கிடைக்கவில்லை, ஹிஜாபுடைய நோக்கம் என்னவென்றால்... ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது ஹிஜாமுக்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது, நாம் ஹிஜாபை அணிந்திருந்தும் நம் அழகை வெளிப்படுத்துகின்றோம் என்றால் அந்த ஹிஜாப் அணிந்தும் பயனில்லை, குழந்தைகளிடம் நாம் Qualityயான நேரம் ஒதுக்க வேண்டும், இந்த Qualityயான டைம் கொடுக்கும் போது தான் அவர்களுக்கு ஒழுக்க பயிற்சி கொடுக்க முடியும், இப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குழந்தையும் ஒழுக்கமுள்ள குழந்தையாக மாறும் போது அந்த சமுதாயமும் மாறும், நாம் அதற்கு முயற்சி செய்ய வேண்டும்" என்று மக்களிடையே மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

வினாடி வினா போட்டி & கண்காட்சி

ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் சூரத்துல் நூர் அத்தியாயத்திலிருந்து நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற GIO மாணவிகளுக்கு Cash-Prize வழங்கப்பட்டது, 

இந்நிகழ்ச்சியில் GIO மாணவிகளின் ஒழுக்கமே சுதந்திரம் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது, மேலும் இந்த ஒழுக்கமே சுதந்திரம் குறித்த கண்காட்சி நடத்திய மாணவிகளுக்கு, ஜமாத்தின் அபிமானி ஒருவர் மாணவிகள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

நிகழ்ச்சியை சகோதரி ஃபர்சானா சுல்தானா வழிநடத்தினார், நிகழ்ச்சியின் இறுதியாக சகோதரி ரூபியா நன்றியுரை கூறினார், சுமார் 150 க்கும் மேற்பட்ட  இஸ்லாமிய மற்றும் சகோதர சமுதாயங்களை சார்ந்த மகளிர் சொந்தங்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியானது சுமார் மதியம் 1 மணி அளவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் துவாவோடு இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.!