News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பொதுக்கூட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரை பொதுக்கூட்டம் கடந்த 27 செப்டம்பர் 2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது .

மது போதை ஆபாசம்  ஆடம்பரம் உள்ளிட்ட ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து மக்களை காப்பதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரையை அகில இந்திய அளவில் 2024 செப்டம்பர் மாதம் முழுவதும் நடத்தி வருகின்றது. 

தற்போது நாட்டில் நிலவி வரும் மது போதை ஆபாசம் தவறான உறவுகள் போன்ற ஒழுக்க சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் செப்டம்பர் மாதம் முழுவதும் ஒழுக்கமே சுதந்திரம் என்ற மையக்கருத்தை முன்னெடுத்துள்ளது. 

இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள தூய அன்னை பேராலய வளாகம் கே எம் எஸ் எஸ் மையத்தில் நடைபெற்றது. 

கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி மெஹர் பானு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் 

இந்த நிகழ்ச்சி கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் தலைமையில் நடைபெற்றது.

ஒழுக்கமே சுதந்திரம் என்ற பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக சாலிடாரிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர். முகமது நாசர் புகாரி அவர்கள் ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். 

சிறப்பு விருந்தினராக கும்பகோணம் மகளிர் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி விஜயலட்சுமி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

கும்பகோணத்தை சுற்றி உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் அல் அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சென்ற வாரம் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது அதில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

சகோதரி ஜுவைரியா ரியாஸ் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள் சகோதரி ரஹ்மத் நிஷா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள

சகோதர சமுதாய சகோதரிகள் மாணவ மாணவிகள்  மற்றும் ஜமாத் ஊழியர்கள் 200க்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள்