ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பாலர் சங்கம் நடத்திய ஒழுக்கமே சுதந்திரம் இஸ்லாமிய கண்காட்சி மேலகாவேரி ஆரிப் சமுதாய கூடத்தில் 07.09. 2024 சனிக்கிழமை அன்று மதியம் 2 மணி முதல் நடைபெற்றது.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி மெஹர் பானு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சகோதரி ரஹ்மத் நிஷா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
கண்காட்சியை திறந்து வைப்பதற்காக சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த மருத்துவர் ப்ரீத்தி சந்திரமோகன் அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்கள்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் மேலக்காவேரி ஜாமியா மஸ்ஜித் தலைவர், செயலாளர் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டார்கள்.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் சகோதரர் அப்துல் கலாம் ஆசாத் மாவட்ட அமைப்பாளர்கள் சகோதரர் முகமது யூனுஸ் மற்றும் நாச்சியார் கோவில் சபீஹுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த கண்காட்சியின் பொறுப்பாளர் சகோதரி பைரோஸ் பானு (JIH மேலக்காவேரி பொறுப்பாளர்) மிகவும் சிறப்பான முறையில் கண்காட்சியே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்கு மேல காவேரியை சேர்ந்த அனைத்து சகோதர சகோதரிகளும் வந்து பார்த்து சென்றார்கள்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பாலர் சங்க குழந்தைகள் சிறப்பான முறையில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரையின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களுடைய கண்காட்சி தயாரிப்புகள் இருந்தது.
மகளிர் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிக்கு அனைத்து ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.