ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் நாடு தழுவிய அளவில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பிரச்சாரத்தை செய்து வருகிறது. பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி கும்பகோணம் சத்தியசோலை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத. இந்த நிகழ்ச்சி கடந்த 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக சத்திய சோலை பொறுப்பாளர் சகோதரர். முஹம்மது யாசிர் அவர்கள் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள்.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட
அமைப்பாளர் சகோதரர் முகமது யூனுஸ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஓர் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பேச்சாளராக திருச்சியில் இருந்து வருகை தந்த அஸ்சலாம் ஆரம்பிக்கல்லூரி இயக்குனர் பேராசிரியர் அமானுல்லா அவர்கள் உரையாற்றி பிறகு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வந்திருந்த ஆசிரியர் பெருமக்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்து ஒழுக்கமே சுதந்திரம் என்ற பிரச்சாரத்தை பள்ளி வகுப்பில் இருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும் என்ற வகையில் அவர்களது கருத்துக்கள் இருந்தது.
இந்நிகழ்வில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்கள் ஊழியர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
50க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு ஒழுக்கமே சுதந்திரம் என்ற நாடு தழுவிய பரப்புரையை பற்றி அறிந்து கொண்டார்கள்.
இறுதியாக சத்திய சோலை பொறுப்பாளர் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சி இறையருளால் இனிதே நிறைவுற்றது