News Channel

பத்திரிக்கை அறிக்கை

25-09-2024 
பத்திரிக்கை செய்தி

இஸ்ரேல் வெளிப்படையான பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. மண்டலத்தில் அமைதியை மீண்டும் நிலைநிறுத்த உறுதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர்

புதுதில்லி: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹூசைனி அவர்கள் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளார். இத்தாக்குதல்கள் "அனைத்து அங்கீகரிக்கப்பட்ட  மனித நெறிமுறைகளையும் சர்வதேச போர் சட்டங்களையும் வெளிப்படையாக மீறுகின்றன" எனக் கூறியுள்ளார்.

“லெபனான் மீதுள்ள இத்தாக்குதல்கள், அப்பகுதியில் உள்ள அழிவை மேலும் மோசமாக்கும் மற்றும் அமைதியை சிதைக்கும் தீய முயற்சியாகும்" என அவர் கூறியுள்ளார். இன்று ஊடகங்களிடம் வெளியிட்ட அறிக்கையில், ஜமாஅத் தலைவர் மேலும் கூறியதாவது: "தெற்கு லெபனான் மீது இஸ்ரேலின் இந்தக் கொடூரமான தாக்குதல்களில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர். மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான அப்பாவி குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 இதனால் அப்பகுதியில் பெரும் மனிதாபிமானச் சிக்கல் உருவாகியுள்ளது."

அவருடைய அறிக்கையில் முன்னர் நடந்த "பேஜர் தாக்குதல்கள்" குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது இஸ்ரேலின் சதி  மற்றும் ராணுவ படைகளின் கூட்டு நடவடிக்கை என CNN தெரிவித்துள்ளது. இதற்கு பல முன்னணி விமர்சகர்கள், உட்பட பெல்ஜியம் துணை பிரதமர் உள்ளிட்டோர் இந்த தாக்குதல்களை "பயங்கரவாத நடவடிக்கை" எனக் கூறியமைக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டது இஸ்ரேல் "Protocol on Mines, Booby Traps and Other  Devices"என்ற சர்வதேச உடன்படிக்கையின் கீழ் கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் இஸ்ரேல் இந்த விஷயங்களில் கடுமையான முறையில் booby traps பயன்படுத்தியுள்ளது. பூபி டிராப்புகள் என்பது பொதுவான, கடுமையான  உபகரணங்களில் வெடி மருந்து பதுக்கி மக்களை தந்திரமாகக் கொன்று விடும் பயங்கரமான செயலாகும் ,இது சர்வதேச போர் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் இந்த விதிமுறைகள் மற்றும் உடன்படிக்கைகளை மீறுவதுடன், அதனுடைய இந்த கொடூரமான செயல்கள் உலக அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக  மாறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், நுழைந்த நாடுகள், இஸ்ரேலின் இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு முன் தற்போது மௌனமாக இருப்பது வியப்புக்குரியது என்று அவர் கூறினார்.

இஸ்ரேலின் அக்கிரமச் செயல்கள் மற்றும் அதன் தீவிர விளைவுகளை சையத் சஆதத்துல்லாஹ் ஹூசைனி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். "இஸ்ரேலின் இந்த வெறியாட்டங்கள் காசாவின் அழிவுகளை மேலும் தீவிரமாக்கும் மற்றும் மண்டலத்தில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளில் பெரிய தடையை ஏற்படுத்தும்" என்று அவர் எச்சரித்தார். 
 காசா மற்றும் தெற்கு லெபனானில் உடனடி போர்  நிறுத்தம் செய்ய வேண்டும் , மண்டலத்தில் இஸ்ரேலின் செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.

அறிக்கையின் முடிவில் அவர் கூறியது," ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த நிலையில் முன்னேறி உறுதியான முறையில் தலையீடு செய்யவில்லை என்றால், மத்திய கிழக்கு பகுதி மிகப்பெரிய போர்  சூழ்நிலைக்குள் நுழையக் கூடும் .இது உலகையே அழிவின் விளைவுகளுக்கு ஆளாகக்கூடும் மற்றும் உலக அமைப்புகளின் நம்பகத்தன்மை மேலும் குறையும் என்று கூறினார்.

வழங்கியவர்: 
முஹம்மத் சல்மான்,
தேசிய உதவி செயலாளர்,
ஊடகப்பிரிவு, 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி.