News Channel

ஒழுக்கமே சுதந்திரம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மகளிர் அணி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்திவரும் ‘ஒழுக்கமே சுதந்திரம் – பிரச்சார இயக்கத்தின்’ ஒரு பகுதியாக புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் சார்பாக புதுச்சேரியில் அமைந்துள்ள கிரெசென்ட் உயர்நிலை பள்ளியில் ஒழுக்கமே சுதந்திரம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. கனகவல்லி அனைவரையும் வரவேற்று வழிநடத்தினார்கள், காலை 10:30 மணியளவில் மௌலவி பிலால் இமாம் அவர்களின் கிராத்துடன் துவங்கியது, 

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மண்டல அமைப்பாளர் சகோ. அப்துல் ஹமீது கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்,   

மேலும் தனது சிறப்புரையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எனும் பேரியக்கம் ஏன் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையை முன்னெடுத்துள்ளது. ஒழுக்கரீதியாக சமூகத்தை கட்டமைக்க வேண்டிய அவசியத்தைக் குறித்தும் விளக்கினார், இன்று சமூகத்தில் நிலவி வரும் ஒழுக்க சீர்கேடுகள், தேவையான நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆலோசனைகள் குறித்தும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்புகள் குறித்தும் மிக விளக்கமாக கூறினார்கள்.

மேலும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்திய சமூகத்தில் செய்து வரும் பணிகள் குறித்தும் விளக்கினார்.

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம் கொண்ட புத்தகம், சமரசம், உதயத்தாரகை இதழ்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. கனகவல்லி அவர்கள் தனது உரையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் இத்தகைய முயற்சிக்கு வாழ்த்துக்களை
தெரிவித்து கொண்டார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒழுக்கரீதியாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக மௌலவி பிலால் இமாம் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மகளிர் அணியினர் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், சகோதரி ரேஷ்மி மற்றும் ரூபியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.