News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மகளிர் அணியினர் சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர், 
ஒழுக்கமே சுதந்திரம் அகில இந்திய பரப்புரை இயக்கம் சார்பாக புதுச்சேரி அருகில் உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள வேதா உயர்நிலை பள்ளியில் ஒழுக்கமே சுதந்திரம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. S.ரேவதி சத்யப்பிரியா அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள், 
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக JIH மண்டல அமைப்பாளர் சகோ. அப்துல் ஹமீது கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார், 
மாலை 3 மணியளவில் நிகழ்ச்சி துவங்கியது,
 சகோ. அப்துல் ஹமீது தனது சிறப்புரையில் இன்று சமூகத்தில் நிலவி வரும் ஒழுக்க சீர்கேடுகள், 
தேவையான நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆலோசனைகள் மற்றும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம் குறித்தும், 
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்புகள் குறித்தும் மிக விளக்கமாக கூறினார்கள்.

மேலும் இஸ்லாமிய நூல்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்திய சமூகத்தில் செய்து வரும் பணிகள் குறித்தும் விளக்கினார்.

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம் கொண்ட புத்தகம், சமரசம், உதயத்தாரகை இதழ்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. S.ரேவதி சத்யப்பிரியா அவர்கள் தனது உரையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் இத்தகைய முயற்சிக்கு நன்றி தெரிவித்தார், மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பாக அமைந்தது. 

நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒழுக்கமே சுதந்திரம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மகளிர் அணியினர் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் சகோதரி ஷாஹின் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.