News Channel

கரூர் எம்.பி. மகிழ்ச்சி..!


ஒழுக்கமே சுதந்திரம்
 பரப்புரையையொட்டி 17/09/2024 அன்று கருர் மகளிர் அணியினர் மக்களவை உறுப்பினர் 
சகோதரி. ஜோதிமணி
அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.
 பரப்புரையின் நோக்கம், நாட்டு நடப்பு, பெண்கள் மீதான கொடுமைகள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள். 

பரப்புரை மடக்கோலையையும், சமரசம், உதயதாரகை, இதழ்களையும் ஐஎஃப்டி நூல்களையும் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

மனம் விட்டுப் பேசிய மக்களவை உறுப்பினர் பள்ளிகளில் குறிப்பாக மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் இந்தப் பரப்புரை சேர்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் முஸ்லிம் பெண்கள் இந்தப் பரப்புரையை முன்னெடுத்து இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்தார்.