ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்திவரும் ‘ஒழுக்கமே சுதந்திரம் – பிரச்சார இயக்கத்தின்’ ஒரு பகுதியாக கோவையில் பல்சமய உரையாடல் கருத்தரங்கம் “சமயங்களின் பார்வையில் ஒழுக்கம்” என்ற தலைப்பில் செப்டம்பர் 15 ஆம் தேதி திவ்யோதயா அரங்கில் வைத்து நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் திரு. P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தனது தலைமையுரையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எனும் பேரியக்கம் ஏன் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையை முன்னெடுத்துள்ளது. ஒழுக்கரீதியாக சமூகத்தை கட்டமைக்க வேண்டிய அவசியத்தைக் குறித்தும் எடுத்தியம்பினார்.
தொடர்ந்து பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரம் தலைவரும், சர்வ சமய கூட்டமைப்பு நிறுவனருமான குருஜி ஷிவாத்மா அவர்கள், கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வரும், தாளாளருமான அருட்தந்தை பி.ஆரோக்கிய ததேயூஸ் அவர்கள், மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலவி M.M.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி ஆகியோர் சமயங்களின் பார்வையில் ஒழுக்கம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் நாலேட்ஜ் சென்டர் பொறுப்பாளர் திரு. ஆஷிக் அவர்களும், திரு. அன்சாரி அவர்களும் இறைவசனங்கள் ஓதினர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மக்கள் தொடர்புச் செயலாளர் திரு.அப்துல் ஹக்கீம் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள். சிறப்பு விருந்தினர்களாக சென்ட் மேரிஸ் மருத்துவமனையின் RMO Dr. ஆக்னஸ் MBBS., MD. அவர்களும், திவ்யோதயா இயக்குனர் அருட்தந்தை வில்சன் அவர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர மகளிர் அணி தலைவர் திருமதி. ஜஹீனா அஹமது அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.
தொடர்ந்து அனைவரும் ஒழுக்கரீதியாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சகோதர சமுதாயத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். வருகை தந்தவர்களுக்கு ஒழுக்கமே சுதந்திரம் பிரச்சார இயக்கத்தின் மடக்கோலைகள், புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. வருகை தந்தவர்கள் கருத்தரங்கம் ஒழுக்கம் குறித்தான ஒரு விரிவான பார்வையை வழங்கி இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற பல்சமயக் கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.