News Channel

ஒழுக்கமே சுதந்திரம் ஆசிரியர் தின விழா

ஒழுக்கமே சுதந்திரம் ஆசிரியர் தின விழா

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை சார்பாக ஆசிரியர் தினம் இன்று 5.9.2024 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 வரை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி இறைவசனம் ஓத அதன் தமிழாக்கத்தை சகோதரர் முஹம்மத் மாஸ் படித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது

நகர தலைவர் சகோதரர் சிபகத்துல்லாஹ் தலைமையுரை ஆற்றினார்.

சகோதரர் சுஹேல் அஹ்மத் வரவேற்புரை ஆற்றினார்.

காந்தி ரோடு நகராட்சி உருது நடுநிலைப் பள்ளி ஆண்கள் தலைமை ஆசிரியர் திரு மஹபூப் பாஷா மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ்  நகர்மன்ற உறுப்பினர் திரு ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்து கருத்துரை வழங்கினர்.

சமரசம் பத்திரிகை பொறுப்பாசிரியர் சகோதரர் முஹம்மத் அமீன் ஆசிரியர்களின் கண்ணியம், மதிப்பு, இன்று ஆசிரியர்கள் சந்திக்கின்ற சவால்கள் குறித்து மிக விளக்கமாக உரை நிகழ்த்தினார்.
 
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 12 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கி ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர்களே புத்தகம் மற்றும் ஒழுக்கமே சுதந்திரம் மட்க்கோலை, இனிப்பு வழங்கப் பட்டது .

நிகழ்ச்சியில் 80 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக சகோதரர் பையாஸ் அஹ்மத் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியை சகோதரர் இப்ராஹிம் வழிநடத்தினார்.