News Channel

கோவையில் எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரம் சார்பாக ஊழியர்களுக்கான எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை 25 ஆகஸ்ட் 2024 அன்று ஹிதாயா கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் எழுத்தாற்றல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, எழுத்தின் மூலமாக சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் குறித்து தனது தலைமையுரையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் உரையாற்றினார்.

சிறப்புப் பயிற்சியாளராக சமரசம் இதழின் ஆசிரியர் V.S. அமீன் அவர்கள் வருகை தந்து எழுத்தாளராக பரிணமிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

தொடர்ந்து பன்னூல் ஆசிரியர் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் எழுத்தாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள், குறிப்பாக வாசிப்பின் முக்கியத்துவத்தைக் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து முன்னரே வழங்கப்பட்ட வகுப்பீடுகளை (Assignments) பயிற்சியாளர் V.S. அமீன் அவர்கள் மதிப்பாய்வு செய்து அதில் கொண்டுவர வேண்டிய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இப்பயிற்சிப் பட்டறையில் ஆண்கள், பெண்கள் என இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.