"சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி"
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுரை மாவட்டம்
குரயூரில் அரசு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில்
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் "மௌலவி முஹைய்யிதீன் குட்டி உமரி" அவர்களும்.
விருதுநகர் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் ஜனாப் சாகுல் ஹமீது அவர்களும். குராயூர் ஜும்ஆ பள்ளிவாசலின் இமாம் அப்துல் கரீம் இனாமி அவர்களும்
குராயூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர்கள்
பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சுதந்திர நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அவ் அழைப்பை ஏற்று கலந்து கொண்டார்கள் .
சிறப்பு விருந்தினர்கள் நடைபெற்ற விழாவில் பங்கெடுத்து கொண்டு சுதந்திர தின உரையாக விருதுநகர் கிளை தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க போதனைகளையும் மாணவ மாணவிகள் மத்தியில் எவ்வித வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் காணாமல் சகோதரத்துவ அடிப்படையில் வாழ்வியல் முறையையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உபதேசம் வழங்கினார். இறுதியாக சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு குராயூர் முஸ்லிம் ஜமாத் சார்பாக இனிப்பு பதார்த்தங்கள் வாங்கப்பட்டது.
†**†**************************
மக்கா நகர் சுதந்திர தின நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் மக்கா நகரில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது .
ஜமாத் தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைக்க
மக்கா நகர் ஜும்மா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஜாஃபர் தாவதி அவர்கள் உரை நிகழ்த்த
மக்கா நகர் இளைஞர் சங்கம் மற்றும் சாரிடாதி இளைஞர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடைபெற்றது.
இமாம் அவர்கள் உரையில் கூறுகின்ற பொழுது இந்த இந்திய தேசம் பன்மை சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பெருமைக்கு காரணமே ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை சகோதரத்து அடிப்படையிலே எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக போராடி வாங்கியதனுடைய விளைவு தான் இந்த ஒற்றுமைக்கான அடிப்படையாக இருந்து வருகிறது.
எப்படி நாம் இந்த நாட்டை ஒன்றாக இருந்து அடிமைத்தனத்திலிருந்து மீட்டமோ அப்படியே சுதந்திரம் பெற்ற இந்தியாவிலும் நாம் ஒன்றாக வாழ்ந்து இந்த இந்தியாவுடைய வளர்ச்சியில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் அப்படி பயணிக்க கூடிய நிலையில்தான் இந்தியா வல்லரசு அடையும் என்கின்ற கருத்தை அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு பதார்த்தங்கள் வழங்கப்பட்டு மகிழ்ச்சியாக சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
******************************
முஹமதியாபுரம் பகுதியில் சுதந்திர தின விழா
ராமநாதபுரம் மாவட்டம் முகமதியாபுரம் பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சுதந்திர தின நிகழ்ச்சியை முகமதியாபுரம் சாலிடாட்டி இளைஞர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சு
தந்திர தின நிகழ்ச்சியின் துவக்கமாக நமது நாட்டின் தேசிய கொடியை பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அவர்கள் ஏற்றி வைத்தார்.
செய்யாலூர் பஞ்சாயத்து தலைவர் முன்னிலை வகித்தார்.
முஹமதியாபுரம் ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஆலிம் அபூபக்கர் தாவதி அவர்கள் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அவர் உரையில் கூறுகையில் இந்த சுதந்திரம் அடைவதற்காக பல்லாயிரம் உயிர்களை இழந்து இச்சுதந்தத்தை நாம் பெற்றுள்ளோம். ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்டெடுப்பதற்காக ஜாதி, மத, வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து இச்சுதந்திரத்தை நாம் அடைந்திருக்கிறோம்.
பெற்ற சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் நம்முடைய ஒற்றுமை எப்பொழுதுமே உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஒன்று பட்டால் பல நல்ல காரியங்களை நம்மால் நிறைவேற்ற முடியும் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்கின்ற சொல்லாடலுக்கு ஏற்ப நாம் ஒன்றாக வாழ்ந்து சமூகத்திற்கு பல நன்மைகளை பெற்றுத் தர முடியும்.
உலகத்தில் இந்தியாவின் சிறப்பு பன்மை சமூகத்தில் கூட்டாக வாழக்கூடிய இச்சையில் தான். ஆக உலக அரங்கில் தலை நிமிர்ந்து நாம் நிற்க வேண்டும் என்றால் பன்மை சமூகமாக கூடி வாழ்ந்து நாட்டினுடைய ஒருமைப்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் நாம் துணையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அழகிய முறையில் உரையை நிகழ்த்தினார்.
இறுதியாக நிகழ்ச்சி சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு பதார்த்தங்கள் வழங்கப்பட்டன.
*******************************
தீன் நகரில் "சுதந்திர தின நிகழ்ச்சி"
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தீன் நகரில் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜமாத் தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைக்க
பள்ளிவாசலின் மக்தப் மதரஸா மாணவ மாணவிகள் சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
சுதந்திர தின உரையின் வாயிலாக மாணவ மாணவிகள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய காரணமாக முஸ்லிம் தலைவர்கள் இருந்ததை நினைவு படுத்தினார்கள்.
கப்பலோட்டிய தமிழன் கப்பல் வாங்குவதற்கு முஸ்லிம்கள் தான் உதவி செய்திருக்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களுடைய எண்ணிக்கையை விட அதிகமான உயிர்களை துறந்து இருக்கிறார்கள்.
அதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவினுடைய நுழைவாயிலில் பொறிக்கப்பட்ட முஸ்லிமுடைய பெயர்கள் சான்றாக விளங்குகிறது.
தங்களுடைய சொத்துக்களை சுதந்திர போராட்டத்திற்காக தியாகம் செய்ததையும், கதர் ஆடைகள் உருவானதுடைய வரலாறையும் மிக அழகிய முறையிலே மக்தப் மதரஸா மாணவ மாணவிகள் எடுத்துரைத்தார்கள்.
கலந்து கொண்ட அனைவரும் அவருடைய உரையை பார்த்து வியந்து பாராட்டவும் செய்தார்கள்.
இறுதியிலே பள்ளிவாசல் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் முழங்கி சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தன. கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்
*******************************
மதரஸாவில் சுதந்திர தின விழா
ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி ஊரில் அமைந்துள்ள ராவியத்துல் பஸரியா மதரஸா சார்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் ரமலான் நகர் ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் மவுலவி சம்சுதீன் ஃபைஜி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவின் முன்னதாக தேசிய கொடியை குயவன்குடி ஜமாத் தலைவர் ஏற்றி வைக்க
சுதந்திர தின சிறப்புரையாக மௌலவி சம்சுதீன் ஃபைஜி அவர்கள் உரை நிகழ்த்தினார். உரையில் வாயிலாக அவர் கூறுகையில் இந்நாடு பல பகுதிகளாக பிரிந்து கிடந்த மாகாணமாக இருந்த காலம் முதல் இந்தியா சுதந்திரம் பெற்று ஒன்றாக ஆகி இப்பொழுது உலகத்தின் மிக முக்கிய நாடாக வளம் வருவது முதற்கொண்டு முஸ்லிம்களுடைய பங்களிப்பு அளப்பரியதாக இருந்து வருகின்றது. இதை யாராலும் மறுக்க, மறைக்க முடியாது.!
காரணம் ஆங்கிலேயர் காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்த இந்தியாவை மீட்டெடுப்பதில் முஸ்லிம்களின் மக்கள் தொகை சதவீதத்துக்கு அதிகமாகவே அவர்கள் உயிரையும், பொருளையும் தியாகம் செய்திருக்கிறார்கள். பல மௌலவிகள் சுதந்திரப் போராட்டத்தில் முன்னெடுத்து தங்களுடைய இன்னுயரையும் அர்ப்பணித்திருக்கிறார். பல பெரும் செல்வந்தர்கள் இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்காக அன்றைய காலத்திலேயே கோடிகளிலே உதவிகள் செய்திருக்கிறார்கள். முஸ்லிம்களிடத்தில் வாங்கி உதவி பெற்ற பல தலைவர்கள் அவர்கள் செய்த அந்த தியாகம் தான் வெளிவந்திருக்கிறதே தவிர அந்த தலைவர்களுக்கு செய்த முஸ்லிம்களுடைய உதவி மறைக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும், முஸ்லிம்கள் தங்களுடைய நாட்டு பற்றை ஒருபோதும் அவர்கள் மறுக்கவில்லை, குறைக்கவில்லை இன்றளவும் இந்த நாட்டிற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டினுடைய வளர்ச்சிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டினுடைய ஒற்றுமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் கண்கூடாக அறிந்து கொண்டிருக்க கூடிய உண்மை.!
ஆக இந்நாட்டின் சுதந்திரத்தில் முஸ்லிம்களுடைய பங்களிப்பு அளப்பரியதை மிக அழகிய முறையில் அவர்கள் உறையில் எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக சுதந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு பதார்த்தங்கள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.
****"*"*************************
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது அவ்வகையில்
ஓடைகுளம்,மறவாய் குடி,கோட்டை யேந்தல்,ரமலான் நகர்
ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சுதந்திர நிகழ்ச்சி நடைபெற்றது.
நடைபெற்ற பள்ளிக்கூடத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிவாசலின் இமாம்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் நிகழ்ச்சி நடைபெறுகின்ற பொழுது ஜமாத்தார்கள் நிர்வாகத்தின் சார்பாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கெடுத்து வருகின்றனர்.
சில இடங்களில் இமாம்களை சுதந்திர தின உரை நிகழ்த்துமாறு அழைக்கப்படுவதுண்டு அப்படி உரை நிகழ்த்துகின்ற சமயத்தில் சுதந்திர தின உரையாக மாணவிகள் மத்தியில் சகோதரத்துவ சிந்தனையையும் பாகுபாடு பார்க்கக் கூடாத செயலையும் குறிப்பிட்டு பேசப்பட்டு வருகின்றது.
காரணம், இன்றைக்கு ஏற்றத்தாழ்வுகள் பள்ளிக்கூட அறையிலிருந்து துவங்குகின்றன அதன் விளைவாக நாம் கல்லூரிகளிலும் பெரும் பெரும் பல்கலைக்கழகங்களிலும் ஏற்றத்தாழ்வின் தாக்கங்களை நம்மால் பார்க்க முடிகின்றது. ஆரம்பமாக இது எங்கே சரி செய்ய வேண்டுமோ அங்கே சரி செய்கின்ற பொழுது இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றுதான், சமம் தான் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும். அப்படி செய்கின்ற பொழுது தான் பெற்ற சுதந்திரத்தை நம்மால் உணர முடியும் காரணம் சுதந்திரம் என்பது பல மதம் இனம் மொழி ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற சுதந்திரம். அப்படி பெற்ற சுதந்திரத்தையும் அனுபவிக்கும் பொழுதும் கூட பல ஜாதி மதம் இனம் மொழி எல்லாம் கடந்து மனிதர்கள் என்கின்ற அடிப்படையில் இந்த பூமியில் நாம் வாழ வேண்டும் அதற்கு சமூக ஒற்றுமை மிக முக்கியம் என்பதை தங்களுடைய உரைகளின் வாயிலாக இமாம்கள் மிகச் சிறப்பாக பதிவு செய்து வருகின்றனர்.
*******************************
மதுரை மாவட்டம் பகுதிகளில் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நடைபெற்றது. அவ் விழாக்களில் உள்ளூர் இமாம்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
காண்டை ,சொக்கநாதன் பட்டி ,அணைக்கரைப்பட்டி
ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சுதந்திர நிகழ்வுகள் பங்கெடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் ஜமாத்தார்களை அழைப்பதுண்டு அவ்வகையில் இந்த ஆண்டும் சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் ஜமாத்தார்களே அழைக்கப்பட்டிருந்தார்கள் அழைப்பினை ஏற்று அவர்களும் அந்த நிகழ்விற்கு சென்று சிறப்பித்தனர்.
சில இடங்களில் சுதந்திர தின நிகழ்ச்சியின் உரை நிகழ்த்துவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அப்படி கிடைக்கப்பெற்ற வாய்ப்பினை இமாம்கள் சரியாக பயன்படுத்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் மாணவ மாணவிகள் மத்தியில்
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு மிக அவசியம் ஒற்றுமை தான் ! அந்த ஒற்றுமையின் காரணமாகத்தான் இந்த நாடு ஆங்கிலேயர்கள் வசம் இருந்த அடிமைத்தனத்திலிருந்து வெளிவருவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.
ஒற்றுமையாக பெற்ற இந்த சுதந்திரத்தை இந்த சுதந்திர இந்தியாவை உலக வல்லரசாக நாம் மாற்ற வேண்டுமென்றால் நமது ஒற்றுமையை நிலை நிறுத்தி ஜாதி மத இன மொழி பாகுபாடு இன்றி நாம் வாழுகின்ற பொழுது நம்ம நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற முடியும். அதிலும், மாணவர்கள் மத்தியிலே எவ்வித ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் இல்லாமல் நாம் ஒற்றை இந்தியனாக நம்முடைய பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
கூட்டு வாழ்வில் மிக அவசியமாக இருப்பது ஒற்றுமை தான். ஆக இந்த ஒற்றுமையை எந்த நேரத்திலும் நாம் தொலைத்து விடக்கூடாது சிதைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசப்பட்டன.
சுதந்திர தின நிகழ்ச்சியின் பங்கு எடுத்த ஜமாத்தார்கள் இமாம்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜமாத்தின் சார்பாக இனிப்பு பதார்த்தங்களை வழங்கி சிறப்பித்தனர்.