News Channel

எழுத்தாளர் பயிற்சி பட்டறை

"எழுத்தாளர் பயிற்சி பட்டறை"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு&புதுச்சேரி 
சார்பாக எழுத்தாளர் பயிற்சி பட்டறை 18.08.2024 ஞாயிறு காலை 10 மணிமுதல் மாலை 6:30 மணிவரை மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது.

ஜனாப் சையத் இப்ராஹிம் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனீபா மன்பயீ 
அவர்கள் 
எழுத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கி தலைமையுரை ஆற்றினார்.

மேலும் 
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஆளுமைகள் 
- ஜனாப் சேயன் இப்ராஹிம் 
- ஜனாப் கொளச்சல் அசீம் 
- ஜனாப் V S முஹம்மது அமீன்
- ஜனாப் அஜீஸ் லுத்புல்லாஹ் 
- ஜனாப் ஜான் முஹம்மது 
- சகோதரி நஸ்ரத் ரோஸி 
- சகோதரி A.ரிஜ்வான ஷகீல் 
ஆகியோர் 

எழுத்தின் தேவை,
எழுத்தின் நோக்கம், 
நடுப்பக்க கட்டுரை, 
கடைசி பக்கம், 
கதை,
கவிதை,
உலகை உலுக்கிய எழுத்தாளர்கள் & புத்தகங்கள்,
மறுப்பு கடிதங்கள் 
இவைகள் அனைத்தும் இஸ்லாமிய ஒளியில் 
"மக்கள் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றுதல்" என்ற வகையில் 
சிறந்த வழிகாட்டல் வழங்கினார்கள்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
மாநிலத் துணைத் தலைவர் 
ஜனாப் I.ஜலாலுதீன் அவர்கள் 
நிறைவுரை ஆற்றினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
மாநில ஊடகச் செயளாலர்
S.சாகுல் ஹமீது 
பயிற்சி பட்டறையை வழிநடத்தினார்.

தமிழகம் தழுவிய அனைத்து ஊர்களிலிருந்தும் 
தேர்வு செய்யப்பட்ட 
60 நபர்கள் கலந்து கொண்டார்கள்.