News Channel

காவேரி ஆற்றை சுத்தம் செய்யும் பணி

காவேரி தூய்மை குழு சார்பாக இன்று 26/7/2024 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் 
கும்பகோணத்திற்கும் மேலகாவிரிக்கும் இடையில் உள்ள காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
 இந்த நிகழ்வில் கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத்,
 மாவட்ட அமைப்பாளர் முகமது யூனுஸ், சகோதரர் முகமது யூசுப், சகோதரர் இலியாஸ் மற்றும் சகோதரர் ஹாஜா மாலிக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த தூய்மைப் பணியில் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள்,
 இதயா கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணி செய்தார்கள். 

 ஒருங்கிணைப்பாளர் திரு பெஞ்சமின் அவர்கள் தூய்மை பணி ஏன் அவசியம்,
 நாட்டையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏன் போன்ற விஷயங்களை 
மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறி இறுதியாக தூய்மையாக இருக்க வேண்டும் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்று நிகழ்ச்சி நிறைவு பெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு 50 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 

இதுபோல் தொடர்ச்சியாக நடைபெறும் தூய்மை பணிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வல்ல அல்லாஹ் ஏற்படுத்துவானாக ஆமீன்.