ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை சார்பாக 24.07.2024 புதன் கிழமை காலை 7-00 மணிக்கு சத்தியச்சோலை அரங்கில் ஜமாத் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிவாசலில் என் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்பு அழைப்பாளர் மெளலவி. முஹம்மது முஹையத்தீன் உமரி. மாநில செயலாளர், Jih அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
நம்முடைய பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று சில யோசனைகளை வழங்கினார்கள்.
1. தீனுடைய செய்தியை கொண்டு செல்ல வேண்டும்
2. சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்து இருக்க வேண்டும்.
3. மாற்றம் நம்மிடம் இருந்து வர வேண்டும்
4. பிரச்சினைக்கு முகம் கொடுப்பது
5. நல்லதை நாமும் செய்வோம் மற்றவர்களையும் செய்ய சொல்ல வேண்டும்
6. மகல்லாவில் உள்ள இளைஞர்களை பஜர் தொழுகைக்கு அழைத்து வேண்டும்.
7. திருர்ஆன் ஓதுதல்
8. பள்ளிகளின் பராமரிப்பில் நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டும்.
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.