ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை சார்பாக பெண்களுக்கான கேடர்ஸ் மோட்டிவேஷனல் நிகழ்ச்சி 20.07.2024 சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் சகோதரர் ஷஃபிகுர் ரஹ்மான் தலைமையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளைத் தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு கேடர்ஸ் மோட்டிவேஷனல் நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் சகோதரர்
முகமது யூனுஸ் அவர்கள் வழி நடத்தினார்கள்.
கோயம்புத்தூர் ஹிதாயா அரபிக் கல்லூரி தாளாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் ஊழியர்கள் எப்படி செயல்பட வேண்டும்? இயக்கத்துடன் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது. வாராந்திர வகுப்பு மற்றும் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது.
இந்த நிகழ்ச்சியில் 40 க்கு மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.