News Channel

மஹல்லா மாநாடு கும்பகோணம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  கும்பகோணம் கிளை மற்றும் கும்பகோணம் நைல் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் இணைந்து 20.07.2024 சனிகிழமை அன்று மாலை 6.30 மணி அளவில் இந்திய சூழலும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் மஹல்லா மாநாடு கோயம்புத்தூரில் இருந்து வருகை புரிந்திருந்த மௌலவி முகமது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலின் தலைவர் ஜனாப். பஷீர்அவர்களின் தலைமையில் கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் சகோதரர் முகமது யூனுஸ் நிகழ்ச்சியை வழிநடத்தி சென்றார். 

சிறப்புரையாற்றிய மௌலவி முகமது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் பள்ளிவாசலுடன் மஹல்லாவாசிகள் எவ்வாறு தொடர்பை வைத்திருக்க வேண்டும் இந்திய சூழலில் முஸ்லிம்கள் எவ்வாறு இருக்க வேண்டும் போன்ற விஷயங்களை மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் மஹல்லா வாசிகளிடம் சிறப்புரையாக எடுத்துக் கூறினார்கள்

இந்த நிகழ்ச்சியில் 100க்கு மேலான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டார்கள்.