News Channel

பத்திரிக்கை அறிக்கை

"பத்திரிக்கைச் செய்தி"


மதரஸா மாணவர்களை வலுக்கட்டாயமாக பள்ளிகளில் இடமாற்றம் செய்வது தனிப்பட்ட மனித சுதந்திரம் மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டித்துள்ளது.

புது தில்லி ஜூலை 20:
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களின் நிலை மற்றும் அடையாளத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு யுக்திகளால் கல்வித்துறையில் தலையிடுவது குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேசியத் துணைத் தலைவர் மெளலானா வலியுல்லாஹ் சயீதி ஃபலாஹி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், மதக் கல்வி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும் என்பது மட்டுமல்ல ஒரு சிறந்த சமுதாயமும் தேவைப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலையில் இஸ்லாமிய மதரஸாக்களில் தங்கள் விருப்பப்படி படிக்கும் மாணவர்களை கட்டாயப்படுத்துவதுடன் அவர்களை மற்ற பள்ளிகளுக்கு மாற்றுவதற்கான தார்மீக  மற்றும் அரசியலமைப்பு உரிமை அரசாங்கத்திற்கோ அதன்  துணை நிறுவனங்களுக்கோ கிடையாது.
அதே போல் RTE சட்டமும் மதரஸாக்களை சுதந்திரமாக செயல்படுத்துவதற்கான உரிமையும் வழங்கியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மதரஸாக்களில் NCPCR போன்ற நிறுவனங்கள் தலையிடுவது சட்ட விரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான செயலாகும்.

குழந்தைகளின் உண்மையான பிரச்சனைகளை புறக்கணித்து  இந்த அமைப்பு தேவையில்லாமல் தனது நோக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை கையாள்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், மெளலான வலியுல்லாஹ் சயீத் ஃபலாஹி, உத்தரப் பிரதேச அரசு, இந்த விவகாரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது  என்றும் கல்விக்கு எதிரான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
(மாவட்ட அதிகாரங்களின் படி மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத)  8449 மதரஸா மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு இயக்கப்படுகிறது.

மதரஸாவின் சேவையில் நம் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, பொது சுகாதார வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளை கூட இழந்துள்ளனர் என்றும் மாநில அரசின் இந்த உத்தரவு, மதரஸா அமைப்பை பாதிக்கும் ஒரு புனிதமற்ற  முயற்சியாகும். நாட்டின் நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் இந்த ஒருதலைப்பட்மான கடுமையான நடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பி  நிறுத்த வேண்டும் என்றும் மெளலானா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வழங்கியவர் :
சல்மான் அஹ்மத் 
தேசிய துணைச் செயலாளர், ஊடகத்துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி

https://www.facebook.com/share/p/E1HmGpN1tyZBanEP/?mibextid=oFDknk