News Channel

மகளிர் அணி ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம்

"ஒருநாள் பெண்கள் முகாம்"

திருப்பூர் மகளிர் அணி சார்பாக 
ஒருநாள் தர்பியா முகாம் 26.06.2024 புதன்
காலை 10.30 முதல் 04 மணிவரை நடைபெற்றது.

தலைமை: S.சாகுல் ஹமீது அமீரே முகாமி 

குர்ஆன் விரிவுரை: சகோதரி ஹம்ஸா பேகம் 

சிறப்புரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி 
"இறைவழியில் கடுமையாக போராடுங்கள்"
 என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

மேலும் 
"தஸ்கியாவும் தர்பியாவும்" என்ற தலைப்பில் PPT காணொளி மூலம் 
மிக விரிவான வகுப்பு எடுத்தார்.

உறுப்பினர்,ஊழியர்,ஆதரவாளர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான வழிகாட்டுதல்களாகவும் 
இயக்கப் பணிகளை இன்னும் வேகமாக செய்ய வேண்டும் என்கின்ற வகையிலும் தங்களை தாங்களே சீர்படுத்தி கொள்ள வேண்டும் என்பதிலும் புதிய உத்வேகத்தை பெற்றார்கள். 


சகோதரி ஸம்சியா பானு அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்.

இம் முகாமில் உறுப்பினர்கள்,ஊழியர்கள்,ஆதரவாளர்கள் 40 பெண்கள் கலந்து கொண்டார்கள்.