News Channel

ஹஜ் வழிகாட்டுதல் முகாம் - 2024

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பில் 2024-ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கான ‘ஹஜ் வழிகாட்டுதல் முகாம்’ 20-05-2024 (திங்கள்கிழமை) காலை 10.30 மணிமுதல் மாலை 5 மணிவரை கோவை போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் ஜனாப். PS.  உமர் ஃபாரூக் அவர்கள் தலைமை தாங்கினார்.

‘ஹஜ்ஜின் உயிரோட்டம்’ என்னும் தலைப்பில் மௌலவி. முஹம்மது ரியாஸ் தீன் அஸ்ஹரி (இமாம், மஸ்ஜிதுல் ஹுதா) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மனிதவளத்துறை செயலாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் ஹஜ் புனித பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைக் குறித்து அகன்ற திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் வழிகாட்டுதலை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை கோவை மத்திய மண்டல செயலாளர் முகம்மது சமீர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
முகாமில் ஆண்கள்-பெண்கள் என 300 ஹாஜிகள் கலந்துகொணடு பயனடைந்தனர்.

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..!