News Channel

சர்வதேச குடும்பங்கள் தினம் - கும்பகோணம்

கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பாக சர்வதேச குடும்பங்கள் தினத்தை முன்னிட்டு 15.05.2024 புதன்கிழமை மாலை 7 மணிக்கு சத்தியச்சோலை உள் அரங்கில் கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளராக அய்யம்பேட்டை மௌலவி நாசர் புகாரி அவர்கள் குடும்பங்களின் தேவை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி மிகவும் விரிவாக எடுத்து கூறினார்கள். 
இந்த நிகழ்ச்சிக்கு சகோதர சமுதாய நண்பர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் ஜமாத் ஊழியர் மற்றும் உறுப்பினர்கள் 25 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். 
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது சகோதரர் முஹம்மது யூனுஸ் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர்.  
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் சகோதரர் திருநாகேஸ்வரம் அப்துல் ரஹ்மான். 
நிகழ்ச்சியின் இறுதியில் குடும்பங்களின் முக்கியத்துவத்தை பற்றி சகோதரர்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்தனர்.