News Channel

கரூர் கிளை GIO பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


கரூர் கிளை GIO வட்டம் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 12.5.24 அன்று காலை ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
 இந்திகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அஸ்ஸலாம் இஸ்லாமிக் கல்லூரியின் இயக்குநர் சகோ. அமானுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
 மாணவிகளின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளிக்கப்பட்டது.
 இந்நிகழ்வில் சகோதர சமய மாணவிகள் 8 நபர்கள் உட்பட மொத்தம் 22 பேர் (GI0 மாணவிகள் மற்றும் பெண்கள் ஊழியர்கள்) கலந்து கொண்டார். 
நிகழ்வை குறித்து கல்லூரி மாணவிகள் மிக்க மகிழ்ச்சியுடன் கருத்துக்களை பகிர்ந்தனர். 
எதிர்காலத்தில் இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்த வேண்டும் என்றும், அவர்களும் வந்து கலந்து கொள்வதாக கூறினார். 
மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்து கொண்ட மாணவிகளுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.