News Channel

மசூதியில் விருந்து

"மசூதியில் விருந்து"

சகோதர சமய நண்பர்கள்
 மற்றும் *தினசரி& 
TV சேனல்கள்,பத்திரிக்கையாளர்களை
மசூதிக்கு அழைத்து விருந்து உபசரிப்பு சிறப்பு நிகழ்ச்சி.

இன்று 11.04.2024 வியாழக்கிழமை 
ரமலான் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் 
திருப்பூர் வெங்கடேஷய காலனி பகுதியில் வசித்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், நண்பர்கள் அனைவரையும் ஒன்றினைத்து
மஸ்ஜிதுல் ஹுதா
(மசூதி) பள்ளிவாசலில் 
 அழைத்து மதிய விருந்து வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சமயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் 15 க்கும் பத்திரிக்கையாளர் என 100 நபர்கள் கலந்து கொண்டு மதிய உணவு சாப்பிட்டார்கள்.

மத நல்லிணக்கம் பேனுகின்ற வகையில் இந்த நிகழ்ச்சியை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருகை தந்த அனைவரும் மதிய உணவு சாப்பிட்டபின் மிக நெகிழ்ச்சியாக தங்களது கருத்துக்களை கூறினார்கள்.
இந்த ஒற்றுமையும் சகோதரத்துவமும் எப்போதும் நம்மிடத்தில் இருக்க வேண்டும் என்று மகிழ்ச்சியையும், 
நன்றியும், வாழ்த்துக்கள் கூறி சென்றார்கள்.