News Channel

ஒற்றைப்படை சிறப்பு நிகழ்ச்சி

ஒற்றைப்படை சிறப்பு நிகழ்ச்சி

ரமலான் மாதம் கடைசி பத்தில் ஒற்றைப்படை சிறப்பு நிகழ்ச்சி. 
மதுரை மாவட்டம் குராயூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் கடைசி பத்தில் பிறை 27 அன்று குரயூர் முஸ்லிம் ஜமாத் மூலமாக சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது வழமை அவ்வகையில் இந்த ஆண்டும் ரமலான் மாதங்களில் பல நிகழ்ச்சிகளை குராயூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - JIH மாநில செயலாளர் V.S முகமது அமீன் அவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - JIH மாநில செயலாளர் மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்வு இரவு 11:00 மணி முதல் பஜர் தொழுகை வரை நிகழ்ச்சி நிரல் ஆக அமைத்து இருந்தார்கள். 

இந்நிகழ்வின் முக்கிய பகுதியாக குர்ஆன் கூட்டு ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.  சூரா : மாயிதா 18 முதல்  24 வரையிலான  வசனம் வரை குர்ஆன் கூட்டு ஆய்வு நடைபெற்றது.
கூட்டாய்வின் முக்கியமான செய்தியாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அந்த சமூகத்திற்கு அல்லாஹ் சுபஹானஹூதஆலா நினைத்துப் பார்க்காத பல வகையிலே தன்னுடைய அருளை வழங்கினான். அந்த சமூக மக்களிடத்தில் இறைவனுடைய உதவி பெறக்கூடிய 
👉ஈமானிய பிடிமானமோ 
👉இறைவனுக்காக செய்யக்கூடிய அர்ப்பணிக்கும் உள்ளமோ 
👉அதற்கான தகுதிகளோ 
இல்லாத நிலையிலும் கூட பல அருட்கொடைகளை அல்லாஹுத்தஆலாவால் தொடர்ந்து அந்த சமூகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. 

ஒவ்வொரு முறையும் அதை பெற்று அனுபவித்து வாழ்ந்த அந்த மக்கள் அல்லாஹுத்தஆலா அந்த மக்களைப் பார்த்து சொல்லப்படுகின்ற ஒவ்வொரு கட்டளையும் நிராகரிப்பதை வரலாறுகளில் பார்க்க முடிகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த சமூக மக்கள் பயணித்து ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் அந்த ஊரின் எல்லையில் வந்தவுடன் மூசா அலைஹிஸ்ஸலாம் அந்த நகரத்துக்குள் உள்ளே நுழையுங்கள் என்று சொன்னால், பல அருட்கொடைகளை அனுபவித்து வந்த அவர்கள்  நாங்கள் உள்ளே நுழைய மாட்டோம் உள்ளே இருக்கக்கூடியவர்கள் ஊரை விட்டு வெளியே சென்றால் நாங்கள் உள்ளே வருகிறோம், வேண்டுமென்றால் மூஸாவே நீயும் உன் இறைவனும் வேண்டுமானால் போர் செய்து கொள்ளுங்கள் என்று நிராகரிக்க கூடிய குணங்களை பார்க்க முடிந்தது. அந்த நேரத்தில் கூட இரண்டு மனிதர்கள் மட்டும் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உறுதுணையாக நிற்பதை நாம் பார்க்கிறோம். 

ஆக இந்த விவகாரங்களை எதோடு ஒப்பிட்டு பேசப்பட்டது என்று சொன்னால், எப்படி மூசா அலைஹிஸ்ஸலாம் சமூகம், பல அருட்கொடைகளை அனுபவித்து எப்படி அவர்கள் இறைவனுடைய கட்டளை நிராகரித்தார்களோ ! அதே போன்று இன்றைக்கு முஸ்லிம்கள் அல்லாஹுத்தஆலா கூறப்படுகின்ற கட்டளைகளை நிராகரிக்கப்படுவதை பார்க்கமுடிகிறது.
இந்த ஆய்வின் மூலம் எப்படி நாம் நம்முடைய உள்ளங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அந்நேரத்தில் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அந்த இரண்டு மனிதர்கள் எவ்வாறு உறுதுணையாக நின்றார்களே அதே போல தான் இந்த சமூகம் இந்த தீனுக்காக உறுதுணையாக நிற்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதோ (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்) அதேபோன்ற நிலை தான் இந்த சமூகத்துக்கும் நிகழும் என்பதை ஆய்வின் மூலமாக அழுத்தமாக வருகை புரிந்த JIH-  இரண்டு செயலாளர்களும் மக்களுக்கு மிக அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள். 

காஸாவில் இன்றைக்கு பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டது. 
புண்ணியம் வாய்ந்த பூமியில் ஈமானிய உறுதியில் வாழக்கூடிய அந்த மக்கள் படும் துன்பங்களளை குறித்தும் . பல நபிமார்கள் அந்த மண்ணில் இருந்து தான் வெளிப்பட்டார்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த இடத்தில் கூட சிறப்பாக யாரும் வாழ முடியல தன்னுடைய ஈமானை பலப்படுத்துவதற்காக அனு தினமும் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். 
📌உண்ண உணவில்லாமல் 
📌உறங்க இடமில்லாமல் 
📌ஒதுங்க வீடு இல்லாமல் 
அவர்கள் அணு தினமும் ஷஹீது அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் சுகங்களோடு சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரச்சனைகளோடு வாழக்கூடிய அவர்களுடைய ஈமானையும் பாருங்கள், பிரச்சனைகளே இல்லாமல் வாழ்ந்துவரும் இன்றைய மக்களுடைய ஈமானையும் பாருங்கள். ஆக ஈமான் உடைய சோதனை எப்படி இருக்கும் என்றால் சுகமான வாழ்க்கையோடு சோதனை வராது கஷ்டங்களோடு இருக்கக்கூடிய காலங்களில் தான் ஈமானிய சோதனை வரும் ஆக நம்மளுடைய வாழ்விலும் கஷ்டங்கள் வருகின்ற போது சிரமங்கள் வருகின்ற பொழுது அது நம்மை சோதிப்பதற்காக அல்ல நம்முடைய ஈமானை சோதிப்பதற்காக அந்த நேரத்திலும் கூட நாம் ஈமானோடு உறுதுணையாக உறுதியாக நாம் வாழ வேண்டும் அப்பொழுதுதான் நாளை மறுமையில் சொர்க்கத்தை நாம் வெற்றி அடைய முடியும் என்று குர்ஆன் கூட்டாய்வு மூலமாக வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் எடுத்துக் கூறினார்கள். 

🖋️பிறகு கேள்விகள்  கேட்கப்பட்டன பதில்கள் தரப்பட்டது. 

🖋️ இஃதிகாப் 
சிறப்பு அம்சமாக மதுரை SIO நகரத் தலைவர் முன்னாள் நகரத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள் என்று 16 நபர்கள் மூன்று நாள் இஃதிகாப் இருந்தார்கள். 

🖋️இந்த நிகழ்ச்சிக்கு JIH-மதுரை மகாமி பஷீர் அஹமது அவர்களும் இயக்க தோழர்களும் 

🖋️விருதுநகர் மக்காமி சாகுல் ஹமீது அவர்களும் இயக்க தோழர்களும் வருகை புரிந்து சிறப்பித்தனர். 

🖋️இளைஞர்களுக்கு சிறப்பு விருந்து. 
குராயூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் மற்றும் JIH-மாநில செயலாளராக உள்ள மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள் இஃதிகாப் இருப்பதற்காக வருகை புரிந்த இளைஞர்கள் இஃதிகாப் இருந்து விடைபெற்று செல்லும்போது இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று விருந்தும் வழங்கப்பட்டார். 

🖋️இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் குராயூர் முஸ்லிம்கள் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என திரளாகவும் விருதுநகர் பகுதியில் இருந்து ஆண்கள் பெண்கள் மதுரையில் இருந்து வந்த மக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய கோலாகலமாக திருவிழா கோலமாக அன்று இரவு சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.

வருகை புரிந்த அனைவரும் மன மகிழ்வோடு மூஸா அலைஹிஸ்ஸலாம் வரலாறுகளில் இருந்து நாம் எதை படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டனர் .
அவர்கள் செய்த அந்த பிழையை பலவீனத்தை இந்த இஸ்லாமிய சமூகத்திடம் நுழைந்து விடக்கூடாது என்கின்ற மகத்தான செய்தியை எடுத்துச் செல்லக்கூடிய சூழலாக அமைந்தது.
இந்நிகழ்வில் சுமார்  85 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நிகழ்ச்சியின் இடையில் தேனீ விருந்தும், சஹர் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.