ஒற்றைப்படை இரவு சிறப்பு நிகழ்ச்சி
இளைஞர்களுக்கான ஒற்றைப்படை இரவு நிகழ்ச்சி ராமநாதபுரம் தீன் நகரில் கடந்த 4/4/ 2024 அன்று ஒற்றைப்படை இரவாக அமைந்த 25 ஆம் நோன்பில் இளைஞர்களுக்கான இரவு தர்பிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலே ஒற்றைப்படை யின் மகத்துவத்தையும் அதில் அமல் செய்ய வேண்டிய ஆர்வத்தையும் வளர்க்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்றது போல இந்த ஆண்டும் தீன் நகர் ஜமாத்தில் உள்ள இளைஞர்களுக்கு சிறப்பு தர்பியா அமர்வு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டு ஜமாத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டு இளைஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளர் ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் வருகை புரிந்திருந்தார்
நான்காண்டு செயல் திட்டத்தின் மிஷனான இஸ்லாத்திற்கு சாதகமாக் மக்கள் கருத்தை மாற்றி அமைக்கக்கூடிய பணியை இளைஞர்கள் மத்தியிலும் அதை வளர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறை முன்னெடுத்து குர்ஆன் கூட்டாய்வாக நடைபெற்றது.
இரவு 11 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி ஆரம்பமாக மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் 45 நிமிடம் வழங்கி குழுவாக முதலில் ஆய்வு செய்யப்பட்டன. பிறகு அனைவரையும் ஒருங்கிணைந்து அவர்கள் ஆய்வு செய்த அந்த கருத்தை குழுவின் தலைவர்கள் எடுத்துரைக்கப்பட்ட பிறகு. இந்த வசனங்களின் மூலமாக 📌நம்முடைய மிஷினை அடைவதற்கான வழிவகைகள் என்ன ?
📌நபி யூசுப் (அலை) செயல்பாடுகள் எப்படி இருந்தது ?
இந்நிகழ்ச்சியில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. வருகை புரிந்த அனைவருக்கும்
👉தேநீர் விருந்தும்
👉சாகர் உணவும்
மேலும் பிற்பகுதியில்
👉 தஹஜ்ஜத் தொழுகையை கூட்டு ரீதியாக நடத்தி அந்நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.