சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி
இராமநாதபுரம் தீன் நகர் பகுதியில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் அப்பகுதியில் உள்ள சகோதர சமுதாயத்தை சார்ந்த மக்களை ஒன்றிணைத்து சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நிகழ்ச்சி நடத்துவது வழமையாக இருக்கின்றன. அவ்வகையில் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து கடந்த 2/4/ 2024 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளர் ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் திரளாக பங்கெடுத்தனர். இந்திரா நகர்
👤ஊர் தலைவர் : ஆனந்தன் மற்றும்
👤ஊர் செயலாளர் விஜய் மார்த்தாண்டம்
👤10 வது வார்டு உறுப்பினர்: காலிதாஸ்
👤11 வது வார்டு உறுப்பினர் : இராணி மாஹாராஜன்
👤கிரைம் பிராச் காவல் துறையினர் : சிலைமணி
👤மேலும்,உள்ளூர் முக்கியஸ்தர்கள், என அரசியல் பிரமுகர்களும், முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.
வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் அவரின் உரையில் கூறுகையில் சமூக நல்லிணக்கத்தை போற்றக்கூடிய இந்த நிகழ்ச்சி என்பது பாராட்டக்கூடிய ஒரு செய்தி அதையும் இந்த தீன் நகர் ஜமாத் முன்னெடுத்து நடத்துவதும் இந்த ஜமாத்தின் அழைப்பை ஏற்று வருகை புரிந்த மக்களுக்கும் வாழ்த்துக்களை கூறி நோன்பு என்பது வெறுமனே பட்டினியை உணர்வதற்கான செயல் அல்ல, இந்த நோன்பின் மூலமாக இறைவன் முஸ்லிம்களிடத்திலே ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எப்படியான மாற்றம் என்றால்
👉ஒழுக்கமுள்ள சமூகமாக
👉பொதுநலமிக்க சமூகமாக
👉சுய ஒழுக்கத்தோடு வாழக்கூடிய பண்புகளோடு
👉பிற மனிதர்களுக்கு உதவி செய்யக்கூடிய குணங்களை வளர்த்தெடுப்பதற்கான காரண காரியமாக இந்த நோன்பு அமைந்திருக்கிறது. வெறும் நோன்பின் மூலமாக தொழுகையின் மூலமாக இந்த செயல் வந்து விடும் என்றால் நிச்சயமாக இல்லை இவைகளை முறையாக உணர்ந்து செய்கின்ற பொழுது அந்தப் பக்குவத்துக்கு மனிதன் வருகிறான்.
நோன்பை குறித்து இறைவன் கூறுகின்ற போது நீங்கள் இறையச்சம் உடையவராக திகழ வேண்டும் என்று இறைவன் கூறி காண்பிக்கின்றான். தொழுகை குறித்து கூறுகின்ற பொழுது தொழுகை உங்களை மானக்கேடான அருவருக்கத்தக்க செயல்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் என்று கூறுகின்றான் ஆக இந்த செயல்களால் முஸ்லிம்கள் ஒழுக்கமிக்க சமூகமாக மாறுகிறார்கள் அவர்கள் மாறுவதால் அவர்களை சார்ந்து இருக்கக்கூடிய அத்தனை மக்களுக்கும் அவர்களுடைய மாற்றம் உதவிகரமாக இருக்கிறது. இவர்கள் ஏன் இந்த செயல்களை செய்கிறார்கள் என்று சொன்னால் நாளை மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையில் ஒவ்வொரு செயலுக்கும் மனிதன் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தன்னுடைய செயலை சீர்திருத்திக் கொண்டு அழகாகிக் கொண்டு மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிறார்கள் அப்படியான சமூக மாற்றத்திற்கான காரணம் தான் இந்த நோன்பு என அவருடைய உரையில் மிக ஆழிய கருத்துகளோடு மிகச் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
வருகை புரிந்த சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்களும் உள்ளூர் ஜமாத்தார்கள் பெரியோர்கள் இளைஞர்கள் மாணவர்கள் என திரளாக இந்த நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்திலையும் பங்கெடுத்து சிறப்பித்தனர்.