சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் காண்டை ஊரில் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 31/ 3/ 2024 ஞாயிற்றுக்கிழமை காண்டை ஜும்ஆ பள்ளிவாசலில் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சகோதர சமுதாயத்தை அழைக்கப்பட்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் வகையிலும், சமூக நலினக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் காண்டை ஊரில் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் சகோதர சமுதாய மக்களை ஆண்கள் பெண்கள் என அனைவரையும் அழைத்து நோன்பு திறப்பு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமங்கலம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் ஜனாப், அப்துல் ஹக்கீம் அவர்கள் வருகை புரிந்தார்கள் அவர்கள் சிறப்புரையில் கூறுகையில் சமூக மாற்றத்தில் நோன்பின் பங்களிப்பு என்கின்ற தலைப்பில் நோன்பு என்பது வெறுமனே விரதம் அல்ல சமூக மாற்றத்தில் ஒழுக்கமிக்க கண்ணியமான வாழ்வை இறைவனுக்கு பயந்தவர்களாக சுய ஒழுக்கத்தோடு பொதுநலத்தோடு பிறருக்கு பலன் அளிக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அவைகளுக்கான பயிற்சியாக தான் இந்த ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள். என்கின்ற செய்திகளை தங்களின் உரையின் வாயிலாக எடுத்துரைத்தார்கள்.
இந்த சமூக நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு காண்டை உள்ளூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள், உள்ளூர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டார்கள்.
காண்டை முஸ்லீம் ஜமாத் ஆண்கள் பெண்கள் என இந்நிகழ்ச்சியில் பங்களித்து எல்லோரும் ஒன்றாக நோன்பு துறந்து, வருகை புரிந்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.