சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் குராயூர் ஊரில் சகோதர சமுதாயத்திற்கான சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் குராயூர் ஊரில் உள்ள சகோதர சமுதாய மக்களை அழைத்து இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது உண்டு.
அவ்வகையில் இந்த ஆண்டும் கடந்த 31/3/2024 அன்று ஞாயிற்றுக்கிழமை சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா துணைதலைவர், மௌலானா அல்ஹாஜ் E.முஹம்மது ஷரீஃப் யூஸுஃபி
அவர்கள் வருகை புரிந்தார்கள்.
இந்நிகழ்வுக்காக உள்ளூர் முக்கியஸ்தர்கள், ஊர் தலைவர், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர், அரசு பணியாளர்கள், உள்ளூர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அழைக்கப்பட்டு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
வருகை புரிந்த சிறப்பு விருந்தினர் தங்களின் உரையின் மூலமாக இஸ்லாத்தைக் குறித்த அழகிய அறிமுகத்தை அவர் செய்தார்
👉 இஸ்லாத்தின் உயர்வான வாழ்க்கை
👉சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கிய கண்ணியம்
👉இஸ்லாம் மக்களுக்கான மார்க்கம்
👉இஸ்லாம் ஒன்றுதான் மனித இனத்தின் ஈடேற்றம்
தன்னை ஒரு சான்றாக முன்னிலைப்படுத்தி இஸ்லாத்தினுடைய மேன்மையை நம் மக்களுக்கு உணர்வு ரீதியாக உரிமையாக அவர்களின் உரையின் வாயிலாக பல செய்திகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியினை குராயூர் முஸ்லிம் ஜமாத் ஜூம்மா பள்ளிவாசல் தலைவரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளருமான மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா துணைதலைவர், மௌலானா அல்ஹாஜ் E.முஹம்மது ஷரீஃப் யூஸுஃபி அவருக்கும் ஊர் முக்கியஸ்தர்களுக்கும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.
வருகை புரிந்த அனைவரும் மன மகிழ்வோடு நிகழ்வில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், முஸ்லிம்களோடு இணைந்து நோன்பை துறந்து, நோன்பு துறந்த பிறகு இந்நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவர்களுக்கும் சிறப்பான முறையில் குராயூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பாக விருந்து உபச்சரிப்பும் நடைபெற்றது. அதிலும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பாக்கி வைத்தனர்.