News Channel

ரமலானே வருக - சிறப்பு நிகழ்ச்சி

மார்ச் 8-2024
 மணப்பாறை தக்வா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் ரமளானை வரவேற்று ரமளானே  வருக எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 நிகழ்ச்சியில்  மதுரை மண்டல பொறுப்பாளர் முகம்மது அப்பாஸ் அவர்கள் ரமளான் மாதத்தின்  சிறப்புகளையும் ரமளான்  மாதத்தில் மக்கள் செய்ய வேண்டிய அமல்களை பற்றியும் சிறப்புரையாற்றினார்.
 ரமளான் மாதம்  குர்ஆனில் சிறப்பு படுத்தப்பட்டுள்ளது பற்றியும்  மக்களுக்கு நல்வழி காட்டுவதற்காக
திருமறை   இறைவனால் இறக்கி அருளப்பட்டமை குறித்தும் உரையாற்றினார். ரமளான் மாதம்  நன்மையின் பக்கம் நம்மை அழைத்துச் செல்வதற்காக உள்ள மாதமாகும் எனவே அம்மாதத்தை மகிழ்வுடன் வரவேற்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும்.
 மக்களுக்கான அருமருந்தான திருமறையின் சிறப்பை மக்களுக்கு  உணர்த்த வேண்டியதும்  திருமறையினால் இச்சமுதாயம் பெறப்போகும் நன்மைகளை விவரிக்க வேண்டியதும் இந்த சமுதாயத்தின் மீது கடமையாக உள்ளது என்பதையும் விவரித்தார்.

  ரமலான் மாதத்தில் தஹஜ்ஜத் ஃபர்ல் ருள்மற்றும் சுன்னத்தான தொழுகைகளை பேணித் தொழுவதும் திருக்குர்ஆனை விளங்கி ஓதுவதும் அதன்படி நடக்க முயற்சிப்பதுமாகிய அடிப்படையான விஷயங்களை பேணி நடக்க வேண்டும்  என உணர்த்தினார்.

 மேலும் திருக்குர் ஆனின் அவசியத்தையும் அது மக்களுக்கு தரும் தீர்வுகளையும் சகோதர சமுதாய மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் குர் ஆன் பெருமைகளை உணரச் செய்வதும் நம் மீது கடமையாகின்றது என அழகாக விவரித்தார்.
இறைவனின் அருளால்
உரையை தொடர்ந்து
ஜும்மா தொழுகை நடைபெற்றது.

  தொழுகைக்குப் பிறகு மணப்பாறை JIH கிளையின் தலைவர் ஜபருல்லா மற்றும் கிளையின் உறுப்பினர்கள் மதுரையில் மண்டல பொறுப்பாளர் முகமது அப்பாஸ் அவர்களுடன்  கலந்துரையாடினார்கள்.
 இறைவனின் அருளால் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.