"மதரஸா ஆண்டு விழா"
திருப்பூர்
நூருல் ஹுதா மக்தப் மதரஸா
12 ஆம் ஆண்டு விழா
மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி வளாகத்தில் *03.03.2024* ஞாயிறு மாலை 4 மணி முதல் 9 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
மதரஸா மாணவிகளின்
கிராத் போட்டி,
பேச்சுப் போட்டி, மனப்பாடம், பட்டிமன்றம், நாடகம், கலை நிகழ்ச்சி,
சிறப்புரைகள் என்று பல வடிவங்களில் நிகழ்ச்சி கட்டமைக்கப் பட்டிருந்தன.
சிறப்பு விருந்தினர்களாக
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் மௌலவி A.முஹம்மது ஹனீபா மன்பயீ
மாநில அமைப்பு செயலாளர்
K.ஜலாலுதீன்
SIO மாநிலத் தலைவர்
S.அஹ்மத் ரிஜ்வான்
SIO மாநிலத் துணைத் தலைவர்
S.முஹம்மது முபீன்
ஆகியோர் கலந்து கொண்டு
உரைகள் நிகழ்த்தி வெற்றி பெற்ற மதரஸா மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மாவட்டம் தலைவர்
S.சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.
- முத்தவல்லி S.மாமன் ஸாஹிப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
- நன்றியுரை
GIO பொறுப்பாளர் சகோதரி பெனாசிர் அவர்கள் வழங்கினார்.
- SIO மாநிலச் செயலாளர்
A.சையத் இப்ராஹிம் அவர்கள்
நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
- மாணவ மாணவிகளின் பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பெற்றோரின் உள்ளங்களை இருக்கின்ற வகையிலும்,
மக்தப் மதரஸாவின் அடிப்படைக் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் என்பதையும் புரிகின்ற வகையில் மதரஸா மாணவிகள் சிறப்பாக நாடகம் மூலம் செய்து காண்பித்தார்கள். - இந்நிகழ்வில்
பள்ளி இமாம்கள், உஸ்தாபிகள், பெற்றோர்கள், மாணவ&மாணவிகள்,
மொஹல்லா பொதுமக்கள்,
உறுப்பினர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்கள், மகளிர் அணி சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டு ஆண்டு விழா இனிதே நிறைவுற்றது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
தகவல்: JIH Tirupur Media team.