News Channel

மனித நேயம் மலர கண்காட்சி JIH கடையநல்லூர.

அஸ்ஸலாமு அலைக்கும்
கடையநல்லூர் JIH சார்பாக கடந்த 10.02.2024. அன்று மனித நேய கண்காட்சி நடைபெற்றது.
ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்கு கடையநல்லூர் கிளைத் தலைவர் பீர் முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.
காட்சி அரங்கை ஹிதாயத்துல் இஸ்லாம் கல்விக் குழும நிர்வாகி A.G. செய்யது முகையதீன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
விஸ்டம் பள்ளி முதல்வர் சகோதரி உமா மகேஸ்வரி,எடுத்தாளர் சேயன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது .
அல்ஹம்துலில்லாஹ் ...
சுமார் 1000 க்கும் அதிகமானோர்  கலந்து கொண்டனர்.
சகோதர சமுதாய சகோதரி களும் கலந்து கொண்டனர்.
பல்வேறு அறிவியல் கண்காட்சிகளைப் பார்த்திருக்கிறோம்.
முதல் முறையாக மனித நேயத்தை வலியுறுத்தி நடைபெறும் ஒரு கண்காட்சி காலத்தின் கட்டாயம் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
விஸ்டம் பள்ளி முதல்வர் உமா அவர்கள் இஸ்லாத்தில் இதெல்லாம் சொல்லப்பட்டுள்ளதா என்று ஆச்சரியத்துடன் வினவினார்.
நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.