News Channel

"மனிதநேயம் மலர" கண்காட்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி கிளை மகளிரணி மற்றும் GIO சார்பில் " மனிதநேயம் மலர" என்கிற மையக்கருத்தில் கண்காட்சி 11.2.2024 அன்று தேனி நேசம் மக்கள் நல சேவை மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

 CIO  மற்றும் GIO மாணவ மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் 30க்கு மேற்பட்ட அரங்குகளை அமைத்து பார்வையாளர்களுக்கு விளக்கி கூறினர்.

 தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தென்னிந்திய தலைவர் சுபேதார்  மகாராஜன் தலைமை வகித்தார். JIH தேனி கிளை மகளிர் அணி பொறுப்பாளர் லைலா வரவேற்றார். அரசு ஆயுர்வேத மருத்துவரும் உளவியல் நிபுணருமான  Dr. பிரித்தா நிலா கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். தொழிலதிபரும்
 அரிமா சங்க பிரமுகருமான குலோத்துங்கன், வெல்ஃபேர் கட்சி  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது சபி, நேசம் மக்கள் நல சேவை மைய தலைவர் காதர் பிச்சை, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி கிளை தலைவர் அபுதாஹிர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சமூக ஆய்வாளரும் பொறியாளருமான பொன்முடி, பிசி பட்டி அன்னை தெரசா ஆங்கிலப்பள்ளி தாளாளர் தேவகுமார், சமூக நல்லிணக்கப் பேரவை பொருளாளர் குழந்தை ராஜ், ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நீலக்கணலன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.

 கண்காட்சி நிறைவு நிகழ்வில் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஜோசப் சேவியர், தேனி புது பள்ளிவாசல் ஜமாத் துணை தலைவர் ஹபிபுல்லாஹ் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் மாணவிகளை பாராட்டி நிறைவுரையாற்றினார். 
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் IFT யின் புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன.
இதில் 200க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தினை பதிவு செய்து சென்றனர். 

JIH தேனி மாவட்ட மகளிரனி மண்டல அமைப்பாளர் பஃரிதா நன்றி தெரிவித்தார்.