News Channel

மனித நேயம் மலர கண்காட்சி

28-01-2024 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காலை கரூர் கிளையின் மகளிரணி, GIO மற்றும் Junior GIO மாணவிகள் இணைந்து மனித நேயம் மலர என்ற மையக் கருத்தில் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி நடத்தினர். Dr. பிரபா M.B.B.S அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். 19 தலைப்புகளில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு பின்னர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். சிறப்பு அழைப்பாளராக ஜாமியா பெரிய பள்ளி தலைவர் Dr. நிஜாம் பாபு அவர்கள்  கலந்து கொண்டு Dr. பிரபா அவர்களுக்கு பரிசளித்தார். கண்காட்சி நிறைவாக இருந்தது என்றும் பல தகவல்களை தாம் தெரிந்து கொண்டதாக Dr. பிரபா தெரிவித்தார். 
பொதுமக்களும் மாணவிகளின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் கண்காட்சிக்கான உழைப்பை சிலாகித்து பாராட்டினர். தாங்களும் பல இஸ்லாமிய கருத்துக்களை புரிந்து கொண்டதாகவும் , அதனை அனைவரும் தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இக்கண்காட்சி அரைநாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.