News Channel

Kovai city ladies wing JIH

பொங்கல் விழாவை முன்னிட்டு 20.1.2024 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோவை வெள்ளலூரில் *சிறப்பு நிகழ்ச்சி* நடைபெற்றது.


சகோதரி சுமையாவின் கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்வில் *கிழக்கு மண்டல மகளிர் வட்ட செயலாளர் சகோதரி ஷகீலா* அனைவரையும் வரவேற்றார். இஸ்லாத்தில் மனித நேயம் குறித்து இறைவனும் இறைத்தூதரும் சொன்ன வழிகாட்டுதல்களை வரலாற்றுச் சம்பவங்கள் மூலமாக எடுத்துரைத்தார்.

போகி, பொங்கல் போன்றவை கொண்டாடப்படுவதின் நோக்கம், புறத்தோற்றத்தை விட அகத்தூய்மை சிறந்ததாக இருத்தல், மனிதர்கள் அனைவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக மாற வேண்டும் என்று *வடக்கு மண்டல அபிமானிகள் வட்டப் பொறுப்பாளர் சகோதரி சாதியா ஜாகீர்* அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

போட்டிகள் நடைபெற்று வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இது போன்ற நிகழ்வுகளில் ஒத்துழைப்பு தருவதாக கலந்து கொண்ட சகோதரிகள் வாழ்த்திப் பேசினர்.


தேநீர் விருந்துடன நடத்தப்பட்ட நிகழ்வில் இறுதியாக *கோவைகிழக்கு மண்டல மகளிர் வட்ட தலைவி P S -அஸ்மாபி* நிறைவுரை நிகழ்த்தினார்.