News Channel

திருச்சி, ஜனவரி 14 தமிழர் பண்டிகையை முன்னிட்டு சகோதர சமுதாய நண்பர்கள் மற்றும் பிரமுகர்களை ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்ட ஊழியர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சமூக நல்லிணக்க சந்திப்பு

திருச்சி, ஜனவரி 14 தமிழர் பண்டிகையை முன்னிட்டு  சகோதர சமுதாய நண்பர்கள் மற்றும் பிரமுகர்களை ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்ட ஊழியர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இச்சந்திப்பில், மூத்த அரசியல் பிரமுகர் பத்திரிகையாளர் திரு. அல்லூர் சீனிவாசன்;  'வாருங்கள் உதவலாம்' அமைப்பின் நிறுவுனர் திரு. ரமேஷ்; மாவட்ட நூலக வாசகர் வட்டம் தலைவர் திரு. கோவிந்த்சாமி; ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் அறங்காவலர் திரு. லோகேஷ்; மாரியப்பா சில்க் ஸ்டோர் உரிமையாளர் திரு. குமார்; கல்லூரி பேராசிரியர் தர்மலிங்கம் ஆகியோருக்கு நூல்களும் இனிப்பும் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டன.

அனைவரும் ஜமாத் ஊழியர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். மேலும் இத்தகைய சந்திப்புகள் அன்பை விதைத்து சமூக நல்லிணத்தை வலுப்படுத்தும் என்று தெரிவித்தனர். சமூக ஒற்றுமைக்கும், பரஸ்பர மதிப்பளித்தலுக்கும் முன்மாதிரியாக இப்பணி உள்ளதாக கூறி ஜமாஅத் ஊழியர்களை வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

புகழனைத்தும் இறைவனுக்கே!