News Channel

சங்கமம் ஓர் அறிமுகம்- மணப்பாறை

.
ஜனவரி 13 மணப்பாறை
JIH கிளையின் சார்பாக
மணப்பாறையை சேர்ந்த முக்கிய முஸ்லிம் பிரமுகர்களுக்கு
சங்கமம் multi State cooperative credit society நிறுவனத்தின்
செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டது.

 திருச்சி மண்டல மேலாளர்  சகோதரர் A.சிராஜுதீன் மற்றும் மணப்பாறை JIH கிளையின் தலைவர் ஜபருல்லா செயலாளர் காதர் பாட்ஷா அவர்கள்
 மற்றும் கிளையின் உறுப்பினர்களுடன் சென்று மணப்பாறை ஜமாத் தலைவர் ஜனாப் முகமது அனிபா மற்றும் துணைத் தலைவர் ஜனாப் பக்குருதீன் அவர்களை சந்தித்து  நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் வட்டி இல்லாத கடன் திட்டங்களின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்கள்.

 வட்டியில்லா வங்கியின் மூலமாக வழங்கப்படும் தொழில் ரீதியான கடன்கள், சிறு தொழில் கடன், தனி நபர் கடன் ,நகை கடன் ,நடைபாதை  வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வகைகள், சுய உதவி குழு மூலம் கடன்கள் சேமிப்புகளின் பெயரில் கடன், சுயதொழில் கடன் காவேரி கடன் திட்டம் வாகன கடன் முதலான வட்டியில்லா கடன் திட்டங்களையும் வட்டி இல்லாத கடன்களின் மூலம் மக்கள் பெறும் பலன்களையும் விவரமாக எடுத்துக் கூறினார்கள்.
 மணப்பாறை பகுதியில் இதன் கிளை அமைப்பை நிறுவுவதன் மூலம் மக்களை பெரிதும் வாட்டி வதைக்கும் வட்டியிலிருந்து விடுபட செய்வதன் மூலம் மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்ற முடியும் என்பதை விளக்கினார்கள். சங்கமம் எல்லோருக்கும் மேலும் தங்களை முன்னேற்றிக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் பிறரின் உதவி பெற தகுதியானவர்களே என்னும் கொள்கையின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான களம் மற்றும் அவர்களின் உதவியை குறித்து  விவாதித்தார்கள்.

 வட்டி உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள். அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும். உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகவும்; வட்டியை (ஹராம்) தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். ஆகவே, எவர் தம் இறைவனிடமிருந்து இந்த அறிவுரை வந்த பிறகு (இனி வட்டி வாங்குவதை விட்டு) விலகிக் கொள்கின்றாரோ அவர் முன்னர் வாங்கியது வாங்கியதுதான் என்றாலும் அவருடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. ஆனால் (இந்தக் கட்டளை வந்த பிறகும்) யாரேனும் (இந்தக் குற்றத்தை) மீண்டும் செய்தால், அவர்கள் நரகவாசிகளே ஆவர்; அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
(அல்குர்ஆன் : 2:275)
 குர்ஆனின் இந்த வசனங்களின் அடிப்படையில் மக்கள் வட்டி வாங்கும் நிலையிலிருந்து அவர்களை காப்பாற்றுவதும் மேலும் எளிய வட்டி இல்லா கடன் திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கும் சங்கமம் அமைப்பின் மூலமாக முயற்சிகளை மேற்கொள்வதற்கும் நல் வாய்ப்பாக இந்த சந்திப்பு அமைந்தது.
 சமுதாயத்தில் செல்வாக்குமிக்க நபர்களை சந்தித்து அவர்களின் மூலமாக மக்களுக்கு இந்த நலத்திட்டங்களை சேர வேண்டும் எனும் எண்ணங்களின் அடிப்படையில் இத்தகைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
 சந்திப்பில் மணப்பாறை ஜமாத் தலைவர், துணைத் தலைவர்,  JIH மணப்பாறை கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் இதர உறுப்பினர்களும் இருந்தார்கள் அவர்களுடன் ஒரு சிறப்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இறைவன் அருளால் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது .
 மேலும் பல முக்கிய நபர்கள் சந்தித்த பிறகு
 சங்கமம் கிளையின் ஒரு கலெக்ஷன் பாயிண்ட் மணப்பாறை நகரில் நிறுவுவதற்கான  முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
 அதற்கான நல்வாய்ப்புகளை  வழங்குவதற்காக  இறைவனிடம் துவா செய்த நிலையில் நிகழ்ச்சி நிறைவுற்றது.