ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை சார்பில் 31.12. 2023 அன்று ஊழியர்களுக்கான தஸ்கியா நிகழ்ச்சி நடைபெற்றது.
*முதல் அமர்வு*
துவக்கமாக மெளலவி. ஹஸீப் பாகவி அவர்கள் *திருக்குர்ஆன் விரிவுரை* நிகழ்த்தினார்கள். திருச்சி கிளைத் தலைவர் முனைவர். ஹஜ் மொய்தீன் அவர்கள் *துவக்கவுரை* நிகழ்த்தினார்கள். தஸ்கியா நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்கள். தொடர்ந்து, மெளலவி. அய்யூப் கான் இன்ஆமி அவர்கள் *இஸ்லாம் கூறும் உளவியல் அணுகுமுறை* என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மனிதனின் உளவியல் அடிப்படையில் அறிவுரை கூறுதல், செயல்படுதல், தீய பண்புகளை களைதல், உள்ளத்தை தூய்மைப்படுத்துதல், ஈமானை உறுதிப்படுத்துதல், இறைவன் மீதும், இறைத்தூதர் மீதும் நேசம் வைத்தல், அனைவர் மீதும் நல்லெண்னம் கொள்தல், நன்மை செய்தல் ஆகியன குறித்து திருக்குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஸீராவின் ஒளியில் விளக்கினார்கள்.
தொடர்ந்து, மெளலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் *தனிமனித தொடர்பும், ஜமாஅத் அறிமுகமும்* என்ற தலைப்பில் ஊழியர்களிடம் உரையாடினார்கள். அவர் பேசுகையில், ஜமாஅத்தை தனி நபர்களிடம் எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பதை விளக்கினார். ஜமாஅத் பற்றி ஊழியர்கள் *தெளிவுடன்* இருக்க வேண்டும். அதனால் ஜமாஅத்தை அறிமுகப்படுத்த தயக்கம் விலகி, ஆர்வம் அதிகரிக்கும். எங்கிருந்து ஆரம்பித்தல் என்பதை அறிய வேண்டும்.
* ஜமாஅத் குறித்து அடிப்படை தகவல்களை குறிப்பெடுத்து வைத்தல். ஆரம்பமாக கீழ்காணும் அடிப்படைகளைக் குறித்து பேச வேண்டும்.
1. இஸ்லாம் முழுமையான மார்க்கம்
2. மார்க்கத்தின் கட்டமைப்பு: முன்னுரிமை,
3. இஜ்திமாயித்- கூட்டமைப்பின் அவசியம், கடமை.
4. தலைமையின் முக்கியத்துவம்.
5. கீழ்படிதல்
6. ஆதாரபூர்வமான செயல்பாடுகள்
7. இலக்கு, குறிக்கோள், இலச்சியம்.
* தனி நபர்களை அடையாளம் காணுதல், பரஸ்பர அறிமுகம் செய்து கொள்தல், புரிந்து கொள்தல். தேவைகளை அறிந்து கொள்தல்.
* ஜமாஅத் குறித்த தரவுகளை வரிசைப்படுத்தி வைத்து கொள்தல்.
* முறையான படித்தரத்தில் (step by step) தனி நபர் தொடர்புகளை வளர்த்தல்.
* சந்திப்புகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
* நபர்களை தேர்ந்தெடுத்து ஆளுமைகளாக உருவாக்க வேண்டும்.
* ஜமாஅத் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அறிந்து கூற வேண்டும்.
*ஜமாஅத்தே இஸ்லாமிக்கும், மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும், தனித்தன்மையையும் எடுத்துரைக்க வேண்டும்.
முதல் அமர்வை கிளைச் செயலாளர். Dr. சேக் மைதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
*இரண்டாம் அமர்வு*
துவக்கமாக பேரா. அப்துல் அஜீஸ் அவர்கள் *உறவை பேணுதல்* எனும் தலைப்பில் ஹதீஸ் தஸ்கீர் செய்தார். முஸ்லிம்கள் இரந்த பந்த உறவுகளை முறிக்காமல், இணைந்து வாழ வேண்டும். பெற்றோர்களை கண்ணியப்படுத்த வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் உறவுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
*இயக்கமும், நாமும்* எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஜனாப். சாகுல் ஹமீது, பேரா. உமர் பாரூக், ஜனாப். அக்பர் அலி ஆகியோர் தங்களின் கருத்துக்களை அனுபவ ரீதியாக பகிர்ந்து கொண்டனர். பேரா. அமானுல்லாஹ் கருத்தரங்கத்தை தொகுத்து வழங்கினார்.
நிறைவாக, மெளலவி. இஸ்மாயில் இம்தாதி அவர்கள் *தியாகமே இயக்கத்தின் வெற்றி* என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசுகையில், இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதாவது அந்த அருட்கொடைகளை உரிய முறையில் பயன்படுத்துதல். இஸ்லாம் எனும் உயர்ந்த அருட்கொடையை அல்லாஹ் நமக்கு தந்துள்ளான். இயக்கத்துடன் இணைந்து வாழும் அருட்கொடையை எனக்கு தந்துள்ளான். இத்தனை அருட்கொடைகளுக்கும் நாம் என்ன அர்ப்பணிப்பு செய்துள்ளோம். நபிகளாரும், நபித் தோழர்களும் தங்கள் வாழ்வை இஸ்லாத்திற்காக அற்பணித்தனர். ஒவ்வொரு செயலும் இறைவனின் திருப்தியை பொருத்தே இருந்தது. அதற்காக எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருந்தார்கள். அதேபோல் இஸ்லாமிய இயக்கத்தில் நாம் அற்பணிப்புடன் பணிகள் செய்ய வேண்டும். இஸ்லாம் வெற்றி பெற வேண்டுமானால், நாம் தியாகம் செய்பவர்களாக மாற வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
இரண்டாம் அமர்மை ஜனாப். சாகுல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்
ஊடகக் குழு-திருச்சி கிளை