பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர், ஆக. 7: தமிழக அரசின் “போதை இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழு (SMC) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், SMC உறுப்பினரும் – jih ஹவுசிங் யூனிட் கிளை பொறுப்பாளருமான சகோதரி ஷகிலா பானு அவர்கள் “போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், போதைப்பொருட்களால் தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கினார். மேலும், தங்களை மட்டுமின்றி தங்களது நண்பர்களையும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவில், பள்ளித் தலைமை ஆசிரியர் சகோதரி ஷகிலா பானுவின் உரையைப் பாராட்டினார். மாணவிகளும் தாங்கள் கேட்ட கருத்துகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதுடன், தங்களது நண்பர்களிடமும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என உறுதியளித்தனர்.
தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளி வளாகத்தைச் சுற்றி விழிப்புணர்வுப் பேரணி நடத்தி, “போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!” என்ற முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில் சகோதரி ஜெரினா மற்றும் சகோதரி ஷகிலா பானு ஆகியோர் கலந்துகொண்டனர்.