News Channel

நாகூரில் TNRW

நாகூரில் TNR W
TNRW (தமிழ்நாடு மீட்பு குழு)வின் சிறப்பு முகாம் நாகூர் தெத்தியில்  உள்ள சமரசம் நகர் பள்ளிவாசலில் 19.7.2026 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக குர்ஆன் வசனங்களை ஒதி தமிழாக்கத்தை TNRW வாலண்டியர் புதுக்கோட்டை அசார் ஓதினார்.  
அடுத்ததாக இந்த கேம்பில் கலந்து கொண்டவர்களை TNRW தமிழ்நாடு கேப்டன்  அசார் வரவேற்றார். 

தலைமை தாங்கி நடத்திய தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் சேவை செயலாளர் முஹம்மது ஆரிப் இந்த கேம்ப்பின் நோக்கத்தை குறித்து எடுத்துரைத்தார்.  

ஜமாஅத் தே இஸ்லாமி மாவட்ட அமைப்பாளர் நாகூர் ரியாஸ் மக்கள் சேவையும் குர்ஆனும்  என்ற தலைப்பில்  மக்கள் சேவை குறித்த வசனங்களை அழகிய முறையில் எடுத்துரைத்தார்.  அவரது உரை TNRW 20-12 என்ற தர்பியாவை மிகச் சரியாக படம் பிடித்துக் காட்டியது.

 இதன் பின்னர் நாகூர் சகோதரர் இப்ராஹிம் ஜமாஅத் தே இஸ்லாமியும் நாகூரும் என்ற ஒரு டாக்குமெண்ட்ரி மூலம் 2004 சுனாமிக்கு பிறகு ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் நாகூரில் செய்த மீட்பு ,நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை துல்லியமாக எடுத்துரைத்தார்.  இது TNRW வாலண்டியர்களுக்கு ஒரு சிறந்த ஒரு வரலாற்று நினைவூட்டலாக அமைந்தது. 

 அதற்கு அடுத்து சமரசம் நகர் தக்வா பள்ளிவாசலில் தூய்மைப் பணியில் TNRW முயற்சியின் விளைவாக இரண்டு மணி நேரத்தில் பள்ளிவாசல் தூய்மையாகியது என்றால் அது மிகையாகாது.  பின்னர் உணவு இடைவெளிக்கு பிறகு அனைவரும் ஆம்புலன்ஸ் பயன்பாடு , அவசர சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் கையாள்வது எப்படி என்று பயிற்சியை நாகூர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ரியாஸ் மூலம் தெரிந்து கொண்டனர்.  

இதற்கு அடுத்ததாக சமரசம் நகரை சுற்றிப் பார்த்து ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் கட்டியுள்ள 100 வீடுகளை பார்வையிடக்கூடிய வாய்ப்பு  TNRW வாலண்டியர்களுக்கு கிடைத்தது .