News Channel

நிர்வாகிகள் சந்திப்பு

22.06.2026 திங்கட்கிழமை, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மெட்ரோ சார்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) தமிழ்நாடு தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது.
அப்போது, ஐஎஃப்டி (IFT) வெளியீடாக டாக்டர் KVS ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதிய வெறுப்பு அரசியல் நூலும், ஷேக் முஹம்மது காரக்குன்னு அவர்கள் எழுதிய இஸ்லாமும் அடிமைத்துவமும் என்ற நூலும் அவருக்கு வழங்கப்பட்டன.
மேலும், இலக்கியத் துறையின் இமயமும் கலைமாமணியுமான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து, டாக்டர் KVS ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதிய எங்கே அமைதி? என்ற நூல் வழங்கப்பட்டது. இச்சந்திப்பு இனிய மற்றும் பயனுள்ள உரையாடல்களுடன் நடைபெற்றது.