News Channel

திருச்சி தய்யிபா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா


“உலகில் மிகவும் மதிப்புவாய்ந்த வளம் சிறந்த பெண்மணியாவாள்”- நபி (ஸல்)

இறைவனின் மாபெரும் கிருபையால் 26.12.2023 அன்று *தய்யிபா முதலாம் ஆண்டு விழா* திருச்சி  ஸ்ரீனிவாச மஹாலில் சிறப்பான முறையில் நடைப்பெற்றது.
சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும்‌ மகத்தான பங்களிப்பு வழங்கக் கூடியவராகவும்‌ திகழ தேவையான அறிவும் திறமைகளும் நிறைந்த இஸ்லாமிய அச்சில்‌ வார்த்‌தைடுக்கப்பட்ட பெண் ஆளுமைகள் உருவாக்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டதுததான் *தய்யிபா கல்லூரி*

இவ்விழாவில் *Dr.சயீதா ஷீரீன், பேராசிரியர் ஃபாத்திமா ஜொஹரா மற்றும் நல்லாசிரியர் பீபி அப்துல்* ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

சிந்தனையை தூண்டும் வகையில் *தய்யிபா மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்* பார்வையாளர்களின் மனம் கவரும் வகையில் நடைபெற்றது.

நேர்மறையான ஒழுக்க விழுமியங்கள், சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகள் மற்றும் நன்னடத்தையும், பொறுப்பும் உள்ள குடிமக்களை உருவாக்கும்  முன்மாதிரி இஸ்லாமிய குடும்ப அமைப்பை வழிநடத்தும் மாணவர்களை வார்த்தெடுக்க இக்கல்லூரி விரும்புகிறது. மேலும் மக்கள் சிந்தனையை இஸ்லாத்திற்கு ஆதரவாக நேர்மறையாக மாற்ற வேண்டியதும் நமது கடமை என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு தலைவர் *மௌலவி முஹம்மது ஹனிபா மன்பஈ* தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் மாணவிகளுக்கு *பரிசுகளும் சான்றிதழ்களும்* வழங்கப்பட்டது.

மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.