கும்பகோணம், மார்ச் 4 –
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை சார்பில் வழக்கறிஞர்களுக்கான இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி கும்பகோணம் அனஸ் ரெஸ்டாரன்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஜனாப் முஹம்மது யூனுஸ் வழிநடத்தினார்.
ஆரம்பமாக வழக்கறிஞர் ஜனாப் முகமது ரியாசுதீன் திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
வழக்கறிஞர்கள் அப்துல் சுபஹான் மற்றும் சம்சுதீன் முன்னிலை வகித்தனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் வரவேற்புரை வழங்கி ரமலானின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம். ராஜசேகர் மற்றும் வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநில செயலாளர் பேராசிரியர் முனைவர் A. ஹஜ் முகைதீன், Ph.D சிறப்புரை வழங்கி ரமலானின் ஆன்மிகப் பயன்கள் மற்றும் சமுதாய ஒற்றுமையின் அவசியம் குறித்து விளக்கினார்.
இதனை தொடர்ந்து கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இப்தார் நோன்பு துறந்தனர்.
இறுதியில் சு. அப்துர் ரஹ்மான் நன்றி உரையாற்றினார்.