கும்பகோணம் அனஸ் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற
பத்திரிக்கையாளர்கள் – ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நோன்பு திறப்பு சிறப்பு நிகழ்ச்சி
இறைவனுடைய அருளால் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
பத்திரிக்கை சங்கத் தலைவர் திரு. ராமச்சந்திரன்,
மருத்துவர் நியாமத்துல்லா,
மற்றும் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் ஜாகிர் உசேன்
முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை தலைவர்
ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள்.
நிகழ்ச்சியை
மாவட்ட அமைப்பாளர் ஜனாப் முகமது யூனுஸ்
மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.
இதனைத் தொடர்ந்து,
சென்னையில் இருந்து வருகை புரிந்திருந்த
வி. எஸ். அமீன் அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
தமது உரையில் அவர்,
பத்திரிக்கையாளர்களுக்கான சில முக்கியமான அறிவுரைகளை பகிர்ந்து கொண்டார்.
அதில்,
உண்மையான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும்,
திட்டமிட்டு உரிமைகள் மறைக்கப்படாமல் இருக்க ஊடகங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்,
ஊடகவியலாளர்கள் சமூகத்தில் ஒற்றுமையை வளர்க்கும் பாலமாக இருக்க வேண்டும்,
சமூக நல்லிணக்கம் மற்றும் நீதியை முன்னிறுத்தும் செய்தி பண்பாட்டை உருவாக்க வேண்டும்
என்ற கருத்துகளை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில்
சுமார் 50-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஜமாத்தார்கள்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இறுதியாக,
இறைவனின் உதவியுடன்
பத்திரிக்கையாளர் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி
இனிதே நிறைவுற்றது.