News Channel

நோன்பு துறக்கும் நிகழ்ச்சி

 
நன்மைகள் பூத்துக் குலுங்கும் மாதமான ரமலான் மாதத்தில்.
 நாம் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதில் இரண்டாக இரண்டு மடங்காக இறைவன் நன்மைகளை உயர்த்திக் கொடுப்பான் என்பதின் அடிப்படையில்.
 ரமலான் மாதம் தொடங்கிய முதலே நம்முடைய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பல நிகழ்ச்சிகளை திட்டமிட்டு அதன் அடிப்படையில் செயல்பட தொடங்கியது.
 அதில் முதல் கட்டமாக சகோதர சமுதாயத்துடன் சேர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நேற்று 23 /02 /26 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடியில் உள்ள கமாலியா தெரு, தெருவாசிகளோடு நம்முடைய ஜமாஅத்தே ஊழியர்களும் உறுப்பினர்களும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாற்று சகோதர சமுதாயத்தோடு 
 ரமலான் என்றால் என்ன ? எதற்காக நோன்பு நோற்கிறோம்? என்ற ஐயங்களை போக்கும் விதமாக (நோன்பு துறக்கவும் மனம் திறக்கவும்)
 என்ற ஒரு சிறந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் சிறப்பு விருந்தினராக தஞ்சையை சேர்ந்த சாலிடாரிட்டி மாநில தலைவர் ரியாஸ் அஹமத் அவர்கள் நோன்பு பற்றி பல அழகான நிகழ்வுகளையும் நோன்பில் இருக்கும் நன்மைகளைப் பற்றியும் சகோதர சமுதாயம் புரிந்து கொள்ளும் அளவிற்கு சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தினார்கள்.
  அதிகமான சகோதரச் சமூகத்து மக்கள் 80க்கு அதிகமானவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்