News Channel

பாபு ராஜபுரத்தில் ரமலானே வருக

12.02.2026 (வியாழக்கிழமை) அன்று
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், பாபுராஜபுரம் வளாகத்தில்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும்
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகம் இணைந்து “ரமலானே வருக” என்ற தலைப்பில்ஒரு சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிதிருக்குர்ஆன் கிராஅத் மற்றும் தஃப்சீர் மூலம் தொடங்கப்பட்டது.
இதனைமௌலிவி சுல்தான் ஹஜ்ரத் (பாபுராஜபுரம்) அவர்கள் வழங்கினார்.

மேலும்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை தலைவர்
ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள்
தலைமை உரை வழங்கி,
ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து
விளக்கினார். அதனைத் தொடர்ந்து,
நாட்டாமை – பாபுராஜபுரம்
ஜனாப் ஹாஜியார் முஹம்மது பாரூக் அவர்கள் மற்றும் துணை நாட்டாமை – பாபுராஜபுரம் ஜனாப் நவ்ஷாத் அலி அவர்கள்
முன்னிலை உரைகள் வழங்கி
நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பின்னர்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக
ஜனாப் முகமது யூனுஸ் அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ஜனாப் மௌலவி கே. முஹம்மத் சலீம் ரியாஜி அவர்கள்
“ரமலானே வருக” என்ற தலைப்பில்
சுமார் 40 நிமிடங்கள் மிகவும் பயனுள்ள சிறப்புரையை வழங்கினார். அவரது உரை,
ரமலானை எவ்வாறு வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில்
பங்கேற்றவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து மொத்தம் 95 பேர்
ஆர்வமுடன் கலந்து கொண்டு
பயனடைந்தனர். நிகழ்ச்சியை
சகோதரர் இன்ஜினியர் அணிஸ் அவர்கள்
ஒழுங்காகவும் சிறப்பாகவும்
வழிநடத்தினார் இறுதியாக
ஜனாப் அனீஸ் அவர்கள்
நன்றி உரை வழங்க,
நிகழ்ச்சி இனிய முறையில் நிறைவுபெற்றது.

அல்லாஹ் இந்த பயனுள்ள நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு,
இதில் கேட்ட நற்செய்திகளை
நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த
எல்லோருக்கும் தௌஃபீக் அருள்வானாக.
ஆமீன்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், கும்பகோணம் கிளை – பாபுராஜபுரம் வட்டம்