News Channel

இப்தார் நிகழ்ச்சி கும்பகோணம்

இன்று 20.02.2026  கும்பகோணம் நைல் நகர் பள்ளிவாசலில்
நடைபெற்ற நோன்பு (இப்தார்) நிகழ்ச்சி
இறைவனுடைய கிருபையால்
மிகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும்
நடைபெற்று நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் கும்பகோணத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள்,
மேலும் KISWA தலைவர் & செயலாளர்,
MISWA (மிஸ்வா) தலைவர் & செயலாளர்,
RIFAH தலைவர் & செயலாளர், மற்றும்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஜமாத்தார்கள்
உள்ளடக்கமாக
கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட நபர்கள்
திரளாக கலந்து கொண்டு
நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை தலைவர்
ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள்
துவங்கி வைத்து, நோன்பின் சமூக ஒற்றுமை,
மனித நேயம் மற்றும் இறைநெருக்கம் குறித்த
சிந்தனைகளை எடுத்துரைத்தார்.

மேலும்
நாகர்கோவிலில் இருந்து வருகை புரிந்திருந்த மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் மிகவும் பயனுள்ள சிறப்புரையை வழங்கினார்.
அதன் பின்னர், துஆவுடன்
நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி
அமைதியான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி,அனைத்து ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின்
ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன்,
இறைவனின் அருளால்
நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டது.
அல்லாஹ் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு,
இதுபோன்ற நன்மையான முயற்சிகள்
சமுதாய நலனுக்காக
தொடரத் தௌஃபீக் அருள்வானாக.